Tuesday, June 04, 2013
சென்னை::(2ம் இணைப்பு) (Full story of kidnapping) ரூ.2.47 கோடி கேட்டு, சென்னையில் இருந்து கடத்தப்பட்ட பிரிட்டன் தம்பதி நெய்வேலியில் மீட்பு!
சென்னை::(2ம் இணைப்பு) (Full story of kidnapping) ரூ.2.47 கோடி கேட்டு, சென்னையில் இருந்து கடத்தப்பட்ட பிரிட்டன் தம்பதி நெய்வேலியில் மீட்பு!
சென்னை வந்த, இங்கிலாந்து வாழ், இலங்கை தமிழ் தம்பதியை
கடத்திய, எட்டுபேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய, தமிழக வாழ்வுரிமை கட்சி
பிரமுகரை தேடி வருகின்றனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிப்பவர், கணபதி பிள்ளை தவராஜா, 59. இலங்கை தமிழரான இவர், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். லண்டனில், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கடந்த மே, 25ம் தேதி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கணபதிபிள்ளை தவராஜாவும், அவரது மனைவி ஜலஜாவும், இலங்கை சென்றனர். தமிழகத்தில் உள்ள, கோவில்களை சுற்றி பார்க்க திட்டமிட்ட இவர்கள், சென்னை, தி.நகரில் உள்ள பிரபல ஓட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். கடந்தமாதம், 29ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தனர்.
போலீசில் புகார்:
நெய்வேலியில் மீட்பு:
கடத்தியது எப்படி?
காட்டிக் கொடுத்த,"டவர்':
தந்தம்' கடத்தப்பட்டதா?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிப்பவர், கணபதி பிள்ளை தவராஜா, 59. இலங்கை தமிழரான இவர், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். லண்டனில், சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். கடந்த மே, 25ம் தேதி, உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கணபதிபிள்ளை தவராஜாவும், அவரது மனைவி ஜலஜாவும், இலங்கை சென்றனர். தமிழகத்தில் உள்ள, கோவில்களை சுற்றி பார்க்க திட்டமிட்ட இவர்கள், சென்னை, தி.நகரில் உள்ள பிரபல ஓட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். கடந்தமாதம், 29ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தனர்.
போலீசில் புகார்:
இந்நிலையில், கொளத்துரை சேர்ந்த குமார்,
தன் நண்பரின் உறவினர்களான, தவராஜா, ஜலஜா தம்பதியினர், கடந்த, 29ம் தேதி சென்னை
வந்ததாகவும், அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. எனவே, கடத்தப்பட்டிருக்கலாம்
என, அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். மேலும், தவராஜா தம்பதியின்
பாஸ்போர்ட் மற்றும் பயண விவரங்களையும், இ- மெயில் மூலம் பெற்று , புகாருடன்
இணைத்திருந்தார். புகார் தொடர்பாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தவராஜா
தம்பதி கடத்தப்பட்டிருப்பது உறுதியானது.
மகளுக்கு மிரட்டல்:
மகளுக்கு மிரட்டல்:
லண்டனில்
உள்ள தவராஜா தம்பதியின் மகள் தர்ஷினி, தனது பெற்றோர் காணாமல் போன விவரத்தை, லண்டன்
காவல்துறை ( ஸ்காட்லாந்து யார்டு) மற்றும் சிறப்பு ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு
(ஸ்பெஷல் ஆர்கனைஸ்டு கிரைம் ஏஜென்சி) தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து யார்டு
போலீசார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தொடர்பு கொண்டு, பேசினர். இதற்கிடையில்,
தவராஜாவின் மகள் தர்ஷினியை, மர்ம நபர் ஒருவர் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, அவரது
பெற்றோரை கடத்தி வைத்திருப்பதாக, தெரிவித்தார். மூன்று லட்சம் இங்கிலாந்து பவுண்டு(
2.48 கோடி ரூபாய்) பணத்தை, இங்கிலாந்தில் தான் கூறும் நபரிடம் கொடுத்தால், பெற்றோரை
விடுவிப்பதாகவும் அவர் கூறினார். இதுபற்றி, ஸ்காட்லாந்து யார்டு போலீசார், சென்னை
கமிஷனர் ஜார்ஜுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கூடுதல் கமிஷனர்( வடக்கு)
தாமரை கண்ணன், மேற்கு மண்டல இணை கமிஷனர் சண்முக வேல் தலைமையில், எட்டு தனிப்படைகள்
அமைக்கப்பட்டன. தவராஜாவின் பின்புலம் பற்றி அறிய, சென்னை போலீசார், லண்டன்
காவல்துறை, சிறப்பு ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு மற்றும் தவராஜா குடும்பத்தினரிடம்
பேசினர்.
ஊழியர் தொடர்பு:
லண்டனில் உள்ள தவராஜாவுக்கு சொந்தமான சூப்பர்
மார்க்கெட்டில், இலங்கை தமிழரான, அஜந்தன் வேலை செய்வதாகவும், இவருக்கு மற்றொரு
சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும், திருச்சியை சேர்ந்த ரமேஷ் என்ற நண்பர்
உள்ளதும் தெரிந்தது. தவராஜா தம்பதியின் பயண விவரங்கள் அஜந்தன் மூலம், ரமேஷûக்கு
தெரிய வாய்ப்புள்ளது என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.
இதற்காக, திருச்சி, கடலூர் மாவட்ட போலீசார் மற்றும் மாநில நுண்ணறிவு பிரிவு
போலீசாரின் உதவியை நாடினர்.
நெய்வேலியில் மீட்பு:
போலீசார், நடத்திய
ரகசிய விசாரணையில், ரமேஷின் நண்பர், திருச்சியை சேர்ந்த கண்ணன் என்கிற தர்மலிங்கம்,
தவராஜா தம்பதியை கடத்தி, கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த மந்தார குப்பத்தில்
வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இம்மாதம், முதல் தேதி இரவு, 9:00 மணிக்கு,
மந்தார குப்பத்தில், தவராஜா தம்பதியை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக, எட்டு பேரை
கைது செய்தனர். இதில், தலைமறைவாகி விட்ட சத்யா என்பவரை தேடி வருகின்றனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதானவர்கள், திருச்சியை சேர்ந்த கண்ணன் என்கிற
தர்மலிங்கம், திருச்சி அகதிகள் முகாமில் வசிக்கும், வசந்த், இளங்கோ மற்றும்
சதீஷ்குமார், மந்தாரகுப்பம் பகுதியை சேர்ந்த, பிரபு, சரவணன், கொடும்பாடி குப்பம்
மதியழகன், ஊலங்குறிச்சியை சேர்ந்த "சஸ்பெண்ட்' ஆசிரியை இந்திரா அந்தோணிமேரி என,
தெரிய வந்தது.
30 சதவீதம் கமிஷன்:
தவராஜாவின் சூப்பர் மார்க்கெட்டில், வேலை பார்க்கும்,
இலங்கை தமிழர் அஜந்தன் மற்றும் திருச்சி ரமேஷ், ஆகியோர் திருச்சியில், ரியல்
எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும், கண்ணணை தொடர்பு கொண்டு, "தவராஜா தம்பதியினர்
திருச்சி வருகின்றனர்; அவர்களை, கடத்தி மூன்று லட்சம் பவுண்ட் பணம் வாங்கினால்,
அதில், 30 சதவீதம் கமிஷன் தருகிறேன்' என்று, கூறியுள்ளனர். இதையடுத்து, கண்ணன்,
"சஸ்பெண்ட்' ஆசிரியை இந்திரா, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சத்யா ஆகியோரின்
உதவியை நாடினார். தவராஜா தம்பதியின், போட்டோ உள்ளிட்ட விவரங்களை, அஜந்தன், இ
-மெயிலில், கண்ணனுக்கு அனுப்பினார். இதையடுத்து, 28ம் தேதி சென்னை வந்து தங்கி,
கடத்தலை அரங்கேற்றியுள்ளனர்.
கடத்தியது எப்படி?
தவராஜா தம்பதியினர்,
29ம் தேதி, காலை, 8:30 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் வந்தனர். விமான
நிலையத்தில் இறங்கி, வெளியில் வந்த போது, அவர்களை, அழைத்துச் செல்ல வந்தவர் போல்,
பெயர் எழுதப்பட்ட பலகையுடன், சத்யா நின்றார். சத்யாவை ஓட்டலில் இருந்து வந்தவர் என
நம்பிய, தவராஜா தம்பதியினர், அவருடன் சென்று, காரில் ஏறினர். அப்போது, காரில்
மேலும் இருவர் இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், கார், தி.நகர் நோக்கி செல்லாமல்,
வேறு திசையில் சென்றது. இதையறிந்த தவராஜா, "எங்கே செல்கிறீர்கள்?' என கேட்டுள்ளார்.
அப்போது, காரில் இருந்தவர்கள், கத்தியை காட்டி மிரட்டி, பணத்திற்காக கடத்தியதாக
கூறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து, மேலும் இருவர், பொலிரோ ஜீப்பில் பின் தொடர்ந்து
வந்துள்ளனர். தொடர்ந்து, கடலூர் மாவட்டம், நெய்வேலிக்கு சென்ற அவர்கள், மந்தார
குப்பத்தில் உள்ள சத்யாவின் வீட்டில் தங்க வைத்திருந்தனர்.
மொபைலில் மிரட்டல்:
தவராஜாவின் மொபைல் போன் மூலம், அவரது மகள் தர்ஷினியை
தொடர்பு கொண்டு," மூன்று லட்சம் பவுண்ட் கொடுத்தால், பெற்றோரை பத்திரமாக ஒப்படைத்து
விடுகிறோம்' என்று, கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த, தர்ஷினி, "மூன்று
லட்சம் பவுண்ட் தன்னிடம் இல்லை' என்றும், கொஞ்சம் கால அவகாசம் தருமாறும்
கேட்டுள்ளார். இரண்டாவது முறையாக, தர்ஷினியை தொடர்பு கொண்ட ஆசிரியை, இந்திரா
அந்தோணி மேரி, "நாங்கள் கேட்ட தொகையை, லண்டனில் உள்ள நபரிடம், கட்டாயம் கொடுத்துவிட
வேண்டும்' என, மிரட்டியதுடன், தவராஜாவின் மொபைல் போனுக்கு, "ரீசார்ஜ்'
செய்துவிடுமாறும் கூறியுள்ளார்.
காட்டிக் கொடுத்த,"டவர்':
இந்த
தகவல்கள் அனைத்தும், சென்னை போலீசாருக்கு, லண்டனில் இருந்து தொடர்ந்து,
அளிக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீசார், திருச்சி, மந்தாரகுப்பம்,
நெய்வேலி, புதுச்சேரி பகுதியில் தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர். கமிஷனர்
ஜார்ஜ், கூடுதல் கமிஷனர் தாமரை கண்ணன் ஆகியோர், லண்டன் காவல் துறையினரை தொடர்பு
கொண்டு, தர்ஷினியை அவரது தந்தையின் மொபைல் போனுடன், தொடர்பில் இருக்குமாறு
அறிவுறுத்தினர். இதேபோல் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன், லண்டனில் இருந்து
பரிமாறி வந்தனர். தொடர்ந்து, மொபைல் போன் "டவர் லொகேஷன்' அறியப்பட்டு, கடத்தல்
காரர்கள் இருக்கும் இடம் குறித்து, கமிஷனரும், கூடுதல் கமிஷனரும், இந்த தகவல்களை
தனிப்படையினருக்கு தெரிவித்து வந்தனர். அதன் அடிப்படையில், மந்தாரக்குப்பத்தில்
வாகன சோதனை நடத்தப்பட்டபோது, இரண்டு கார்களில் வந்த கடத்தல் கும்பலை போலீசார் கைது
செய்து, தவராஜா தம்பதியை மீட்டனர்.
முதல்வருக்கு நன்றி':
கடத்தப்பட்டதும், மீட்கப்பட்டதும் பற்றி, தவராஜா
கூறியதாவது: கடந்த, 2005ம் ஆண்டு சென்னைக்கு வந்திருக்கிறேன். விமான நிலையத்தில்
இருந்து தி.நகர் எவ்வளவு தூரம் என்பது எனக்கு தெரியும். டிராவல்ஸ் கார் ஓட்டுநர்
போல், எங்களை அழைக்க வந்தவர்கள், வேறு திசையை நோக்கி சென்றனர். வாகனம் வேறு பக்கம்
செல்கிறதே என்று கேட்டபோது, போக்குவரத்து மாற்றம் என்றனர். பின் ஓட்டல்
மூடப்பட்டுவிட்டது என்று கூறினர். இதனால், சந்தேகம் அடைந்த நான், மொபைல் போனை
எடுத்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முயன்றபோது, கடத்தல் காரர்கள், மொபைல்
போனை பறித்ததுடன், என்னை தாக்கினர். இவ்வாறு அவர் கூறினார் ஜலஜா
கூறும்போது,""கடத்தல்காரர்கள், முதல் நாள் எங்களை பாத்ரூம் செல்லக்கூட
அனுமதிக்கவில்லை. இரண்டாவது நாள் தான், சாப்பாடு வாங்கிக் கொடுத்தனர். நான்
அணிந்திருந்த, ஏழு சவரன் நகைகளை பறித்துக்கொண்டனர். உயிருடன் திரும்புவோமா? என்ற
பயத்துடனேயே இருந்தோம். எங்ளுக்கு மறு பிறப்பு கொடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா,
சென்னை காவல் துறைக்கு நன்றி,'' என்றார்.
தந்தம்' கடத்தப்பட்டதா?
தவராஜா தம்பதியினர் கடத்தல் சம்பவத்தின் போது, காரில், யானைத் தந்தம்
கடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடலூருக்கு கார் செல்லும் போது,
வழியில், குறவர் இனத்தைச் சேர்ந்த நபர், காரை நிறுத்தி ஏறியுள்ளார். அவரிடம்,
இருந்த பெட்டியில், யானைத் தந்தம், துண்டு துண்டாக வெட்டப்பட்டு,
வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்தும், போலீசார் விசாரணை நடத்தி
வருவதாக தெரிகிறது.
மோசடி வழக்கில் இந்திரா!
பள்ளி ஆசிரியையாக இருந்த, இந்திரா அந்தோணி
மேரியின் மீது சில வழக்குகள், கடலூரில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், 6.5 கோடி ரூபாய், செக் மோசடி வழக்கில், சிக்கியதால், வேலையில் இருந்து
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் தான், மூளையாக
செயல்பட்டு, இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாகவும்
தெரியவந்துள்ளது..

No comments:
Post a Comment