Friday, June 14, 2013

14.06.2003 அன்று கொலைகார புலிகளின் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த தோழர் றொபேட்( தம்பிராசா சுபத்திரன்) நினைவுதினம்!

Friday, June 14, 2013
இலங்கை::தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசியல், சமூக பிரச்சினைகளில் பிரக்ஞை கொண்டு செயற்பட்டவர். தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காக 23 வருடங்கள் தொடர்ச்சியாக அவர் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளில் முன்னணியிலிருந்து கருமமாற்றியவர். அவரது 9வது நினைவு தினம் இன்றாகும்.

சாவகச்சேரி நுணாவில் என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் றொபேட் அவரது 45ஆவது வயதில் 14.06.2003 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டாh. தோழர் றொபேட்டின் குடும்ப சூழல், துன்ப, துயரங்கள், இன்னல்கள் ஏதுமற்றிருந்த போதும் சமூகத்தின் துன்ப துயரங்கள் சமூகத்தில் நிலவிய அநீதிகள் அகல வேண்டும் என்று அக்கறை கொண்டு பொதுவாழ்வில் ஈடுபட்டார். சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் துணிந்தார். அவரது இந்த ஈடுபாடு தான் அவர் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொள்ளக் காரணமாகியது. ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுடன் 23 வருடங்கள் முன்னணியில் இருந்து செயற்பட்ட அவர் இறுதிவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருந்தார். அவர் எதிர்கொண்ட எத்தகைய துன்பமும், நிதி நெருக்கடிகளும், கஷ்டங்களும், ஆசை வார்த்தைகளும், அச்சுறுத்தல்களும் அவரை சஞ்சலமடையச் செய்துவிடவில்லை.

தோழர் றொபோட்டின் பெற்றோர் என்பதை தவிர எவ்வித குற்றமும் இழைத்திராத அவரது தந்தையார் 1989 இல் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1990 இல் அவரது தாயார் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். எந்த இன்னலும், இடையூறும் அவரை நிலைகுலையச் செய்துவிடவில்லை. அவர் எதிர் கொண்ட தேர்தல்களில் எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிட்டாத போதும் கொண்ட கொள்கையில் உறுதியோடும், நம்பிக்கையோடும் இறக்கும் வரை செயற்பட்டார்.

கட்சியில் யாழ் மாவட்டத்தின் இராணுவ பிரிவு தலைவராக, மத்திய குழு உறுப்பினராக, அரசியல் பீட உறுப்பினராகவும் தொடர்ச்சியாக 23 ஆண்டுகள் கட்சிக்குள் அதிகாரமுள்ள ஒருவராகவும். நிதியை கையாளும் ஸ்தானத்திலிருந்தபோதும் இவற்றை துஸ்பிரயோகம் செய்யாதார் என்ற பேச்சுக்களுக்கு இடமளிக்காத ஒருவராகவே விளங்கினார்.

இனப்பிரச்சினை தீர்வுக்கும், சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டம் தான் வழி என்ற நிலைப்பாட்டுடனும் அதற்கு ஈபிஆர்எல்எவ் இன் கொள்கைகளும், வேலைத்திட்டமும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடும் ஈபிஆர்எல்எவ் உடன் இணைந்து கொண்ட அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாகாணசபை முறையின் கீழ் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டுவது சாத்தியம் என்ற நிலை உருவானபோது யாதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட்டவர். சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டோம் என்று இன்று பல புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் ஏங்குகின்ற நிலையில் 25 வருடங்களுக்கு முன்னரே சரியான பக்கத்தை அடையாளம் கண்டு செயற்பட்டவர்களில் ஒருவராவார்.

தனது அரசியல் வாழ்வில் மக்களின் நம்பிக்கைகளுக்கு விசுவாசமாகவும், தனது தலைமையின் கீழ் கட்சிப் பணிகளை மேற்கொண்ட தோழர்கள் ஒவ்வொருவரது நலன் குறித்தும் அக்கறையோடு செயற்பட்டவர். தனது நலன்களை எப்போதும் மக்களின் நலன்களுக்கும், கட்சியின், தோழர்களின் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தி வாழ்ந்து காட்டியவர். விளைவுகளை எண்ணி கலங்காமல், பின்வாங்காமல் சரியானதை செய்து சாதனை புரியவதை சவாலாக ஏற்று செயற்பட்டவர்.

தவறுகளுக்கு எதிராக சளைக்காது போராடிய தோழர் றொபேட் திறமை எங்கிருந்தாலும் வெளிப்படையாய் பாராட்ட தயங்குவதில்லை. ஊர், பிரதேசம், இனம், நாடு, கட்சி என்ற எல்லைகளை கடந்து அவர் மனிதர்களை நேசித்தார். அவ்வாறே இன்று அவரும் நேசிக்கப்படுகின்றார். அவரது உன்னத சிந்தனைகளுக்காகவும், செயல்களுக்காகவும் என்றென்றும் நேசிக்கப்படுவார்..
-------------------------------------------------------------------------------------
புலிகள் அரச படைகளுடன் யுத்தநிறுத்தம் செய்து இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபின்னர் 14.06.2003 அன்று பாடசாலையில் மறைந்திருந்து தோழர் றொபேட் அவர்களை புலிகள் படுகொலை புரிந்தார்கள். அவரது 10வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்!
தோழர் றொபர்ட் சுபத்திரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன,
1990 இல் சோவியத்யூனியன் கிழக்கு ஐரோப்பாவின் வீழ்ச்சியின் பின்னர் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய தேடல்களில் ஈடுபட்டார். அந்த அரசியல் பொருளாதாரமே அவரின் தீவிர ஆர்வத்துக்குரிய சமூக பொருளாதார விடயமாக இருந்தது.

இந்தியாவிலும் அவர் பல இலக்கிய அரசியல் முற்போக்கு சக்திகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். எப்போதும் இலகுவான வேலைகளை எடுத்துச் செய்வதிலும் வாய்ச்சவாடலில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் அவர் கடினமான பணிகளை மேற்கொண்டிருந்தார். அகதி முகாம்களில் வாழ்ந்த தோழர்களை சென்று சந்திப்பதில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர் அர்ப்பணத்துடன் செயற்பட்டார். நம்பியவர்களை நட்டாற்றில் விடக்கூடாது ,சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டும் என்பவற்றில் எல்லாம் அவர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

மக்கள் மத்தியில் வேலை செய்வது நெருக்கடியான போர்க்களங்களை எதிர் கொள்வது அகதி முகாம்களில் வாழ்பவர்களின் நலன்களை கவனிப்பது மக்களுக்கு உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற அவரின் குணாதிசயங்களாக இருந்தன.

1995 இற்குப் பின்னர் யாழில் வேலை செய்ய கிடைத்த சந்தர்ப்பத்தில் சமூகத்தில் நட்பையும் உறவையும் வளர்த்தார். அவர் யாழ் மாநகரசபை அங்கத்தவராக செயற்பட்ட போது ஆற்றிய உரைகள் சிந்தனையை தூண்டுபவை. புகழ்மிக்கவை. சகல கட்சிகளை சார்ந்த அங்கத்தவர்களும் யாழ் ஊடகவியலாளர்களும் அவர் மீது பெருவாஞ்சை கொண்டிருந்தனர். நிமிர்ந்த உறுதியான வசீகரமான தோற்றம் கொண்ட மனிதராக எங்கள் றொபர்ட் தோழர் காணப்பட்டார்.

யாழ்மாநகர சபையில் ஒருமக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்றவகையில் அவரின் பங்களிப்பு மகத்தானது. ஒருஉள்+ராட்சிசபை அங்கத்தவர் பொறுப்பை கூட அவர் மிக நேர்த்தியாக கையாண்டார். சகல கட்சிகளின் அங்கத்தவர்கள் உறுப்பினர்களுடன் நல்லுறவைப் பேணினார். கட்சிகளுக்கப்பால் அவர்களும் தோழர் றொபேர்ட்டின் மீது பேரன்பு ,மதிப்பும் கொண்டிருந்தார்கள். ஏனைய உள்ளுராட்சிசபைகளில் அங்கத்துவம் வகித்த கட்சியின் அங்கத்தவர்களுக்கு உறுப்பினர்களுக்கு எவ்வாறு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது கையாள்வது என்பது பற்றிய சிறந்த வழிகாட்டுதலைச் செய்தார். யாழ்நூலகத்தை திறப்பதற்காக அவர் அயரா முயற்சியை மேற்கொண்டிருந்தார். தெற்கில் இருந்து வடக்கிற்கு விஜயம்செய்த ஊடகவியலாளர்கள் உள்ள+ர் அரசியல் தலைவர்கள் சாதாரணமக்கள் மனித உரிமையாளர்களுடன் உறவை வளர்த்தார்.

அதிகார பகிர்விற்காகவும் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும், அவர் இடையறாது போராடினார். அவரை படுகொலை செய்த புலிகள் இயக்கத்திற்கு எந்த நன் நோக்கும் இருக்க முடியாது. அவர்கள் இன்றுவரை தோழர் றொபர்ட்டின் படுகொலையை உரிமைகோர முடியாத கோழைகளாகத்தான் இருக்கிறார்கள். தோழர் றொபேர்ட் தனது வாழ்வாலும் மரணத்தாலும் தமிழ் புலிபாசிஸ்ட்டுக்களை வெட்கி தலைகுனிய வைத்தள்ளார். தமிழ் பாசிஸ்டுக்கள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை எவ்வளவு நயவஞ்சகமானவர்கள் என்பதை பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்து படுகொலையை அரங்கேற்றியதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். தோழர் றொபர்ட் தனது மரணத்தின் மூலமும் தமிழ் புலிபாசிஸ்டுக்களை அம்பலப்படுத்திச் சென்றுள்ளார்.

அன்னாரின் வாழ்வையும் மரணத்தையும் வரலாறு உரிய முறையில் பதிவு செய்யும். அப்போது புலிபாசிஸ்டுக்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் இருப்பார்கள்.

தோழர் றொபர்ட்டிற்கும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் மரணித்த தோழர்களுக்கும் மக்களுக்கும் எம் இதய அஞ்சலிகள்.

தோழர்கள்       
சென்னை.

No comments:

Post a Comment