Thursday, June 13, 2013
இலங்கை::அரசியலமைப்பின் 13 வது திருத் தம் தொடர்பில் கட்சிகளிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவும் நிலையில் இன்று நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற் குழு கூட்டத்தில் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென அமை ச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊட கத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
குறிப்பாக அரசாங்கத்துக்குள்ளே அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளிலிருந்து 13 வது திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவருவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிர தான கட்சி என்ற வகையில் இன்றைய கட்சி செயற் குழு கூட்டத்தில் அது பற்றி விரிவாக ஆராயப்படுமெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தில் மீண்டும் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என சில தரப்புகளுக்கும் 13 வது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என வேறு சில தரப்புக்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
பதின்மூன்றாவது திருத்தத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என பொது பலசேனா”, “சிங்கள ராவய” ராவணா சக்தி போன்ற பல அமைப்புக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, மாகாண சபைகளை இல்லா தொழிப்பதற்கான தேசிய அமைப்பு பதின் மூன்றாவது திருத்தத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவ்வாறு திருத்தம் ஏற்படுத்தாமல் வடக்கு தேர்தலை அரசாங்கம் நடத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றது.
அத்துடன் அரசியல் கட்சிகள் அமைப்பு க்கள் மற்றும் அமைச்சர்களுக்கிடையிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
இவற்றைக் கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரை யாடப்படவுள்ளது.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு போசனைகள் தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப் போவதாகவும் இதற்கிணங்க இன்று ஜாதிக ஹெல உறுமய கட்சியுடன் ஐ.தே.க. கலந்துரையாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

No comments:
Post a Comment