Friday, June 28, 2013

13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி 10ஆயிரம் பிக்குமார் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தவுள்ளனா்!?

Friday, June 28, 2013
இலங்கை::13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி  10ஆயிரம் பிக்குமார் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி  நடத்தவுள்ளனா்
 
13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி சுமார் 10ஆயிரம் பிக்குமார் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்தவுள்ளனா் என கொழும்பில் இருந்து செய்தியாளர் தெரிவித்துள்ளார்..
 
நாடு முழுவதிலும் இருந்து பிக்குகளும் பிக்கு மாணவா்களும் கொழும்புக்கு சென்று ஆா்ப்பாட்ட பேரணியில் கலந்துகொள்வார்கள் என்றும் 25க்கும் நேற்று அதிகமான பௌத்த அமைப்புகள் ஆதரவு வழங்குவதாகவும் கொழும்பில்  இடம்பெற்ற கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
அடுத்த வரம் அலரிமாளிகைக்கு முன்னாள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் பின்னா் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆர்ப்பாட்டக்காரா் சந்திப்பா் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. நேற்று
பிற்பகல் தோ்தல்கள் ஆணையாளரை சந்தித்த பிக்குமர்ர் சிலா் வடமாகாண சபைத் தோ்தலை நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment