Monday, May 20, 2013
இலங்கை::தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு கட்சியையும் அணுகவில்லை என புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு எந்தவொரு அரசியல் கட்சியிடமும் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட தயா மாஸ்டர் சந்தர்ப்பம் கோரியதாகவும் அதனை நிராகரித்ததாகவும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது பேச்சுவார்த்தை நடாத்த தம்மை அழைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரையோ அல்லது வேறும் உறுப்பினர்களையோ தாம் சந்திக்கவில்லை என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தயா மாஸ்டர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment