Wednesday, May 08, 2013
இலங்கை::முல்லைதீவு பகுதியில், புலிகள் மறைத்து வைத்திருந்த டெட்டனேட்டர்
வெடித்ததில், ஆறு படை வீரர்கள் காயம்!
நேற்று முல்லைதீவு பகுதியில், புலிகள் மறைத்து வைத்திருந்த
டெட்டனேட்டர் வெடித்ததில், ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இலங்கையில்,
புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை, 2009ல் ஓய்ந்தது. விடுதலை புலிகள்
தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின், முல்லை தீவு பகுதியில் ராணுவம் நடத்திய தேடுதல்
வேட்டையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
செய்யப்பட்டன.
இதற்கிடையே, முல்லைத்தீவில், உதயர்காட்டுகுளம் என்ற இடத்தில், கட்டுமான பணியின்
போது, மண்ணை தோண்டிய போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த டெட்டனேட்டர்கள்
வெடித்தன. இந்த விபத்தில், ஆறு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாக, ராணுவ அதிகாரி
வனிகசூரியா தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றுமொரு இராணுவ வீரர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பபிவைக்கப்பட்டுள்ளதாகவும் வனிகசூரியா தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment