Friday, May 10, 2013

மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் வீணாக தலையிடுவதை முற்றாக எதிர்க்கின்றோம்: இலங்கைக்கான கியூபா தூதுவர் இந்திரா லோஜேஸ்!

Friday, May 10, 2013
இலங்கை::மேற்குலக நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் வீணாக தலையிடுவதை தமது அரசாங்கம் முற்றாக எதிர்ப்பதாக இலங்கைக்கான கியூபா தூதுவர்  இந்திரா லோஜேஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க கியூபா உதவும் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் கொழும்பில் உள்ள கியூபா தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
 
அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தேவையற்ற வகையில் தலையிட்டு வருகின்றன. அதேவேளை அமெரிக்க பல சந்தர்ப்பங்களில் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக நடந்து கொண்டுள்ளது எனவும் கியூபா தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார். 
 
 

No comments:

Post a Comment