Wednesday, May 22, 2013

பிரான்ஸ் கடற்படை கப்பலான 'ஜெக்கியூஸ் காட்டியர்' கொழும்பு துறைமுகத்தை இன்று புதன்கிழமை வந்தடைந்துள்ளது!

Wednesday, May 22, 2013
இலங்கை::பிரான்ஸ் கடற்படை கப்பலான 'ஜெக்கியூஸ் காட்டியர்' கொழும்பு துறைமுகத்தை இன்று புதன்கிழமை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலில் 53 கடற்படையின் உள்ளனர். இந்த கப்பலானது வெசாக் கொண்டாட்ட காலத்தின் போது துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று பிரான்ஸ் தூதுவராலயம் அறிவித்துள்ளது.

இந்த கப்பலின் கட்டளை அதிகாரி, கொழும்பு மேற்கு கடற்படைபிரிவின் ரியர் அட்மிரல் ஸ்ரீமேவன் ரணசிங்கவை மேற்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து மரியாதை நிமிர்த்தம் சந்தித்துப்பேசினார்.

இரண்டு நாடுகளின் கடற்படைகளுக்கும் இடையில் நட்புறவை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதுவராலயம் அறிவித்துள்ளது.

இந்த கப்பலில் உள்ள பிரான்ஸ் கடற்படையினர் இலங்கை கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்வுகளிலும் பங்கேற்பர்.

இந்த கடற்படையினர் சர்வோதய அமைப்பின் ஆதரவுடன் வத்தளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பலகல எனும் கிராமத்தில் கிராமத்தவர்களுடன் இணைந்து ஒரு முன்பள்ளியை அமைப்பர்.

30 வருடங்கள் பழமையான இந்த கப்பல் யூலை முற்பகுதியில் சேவையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும் என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment