Saturday, May 4, 2013

கனடா புலிகள் வலையமைப்பு பிரபாகரனுக்கு பணம் அனுப்பி வைத்திருந்ததாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது!

Saturday, May 04, 2013
இலங்கை::கனடா புலிகள் வலையமைப்பு பிரபாகரனுக்கு பணம் அனுப்பி வைத்திருந்ததாக திவயின   செய்தி வெளியிட்டுள்ளது!
 
புலிகள் வலையமைப்பிற்கு கனடாவிலிருந்து சுவிட்சர்லாந்து ஊடாக 200 மில்லியன் டொலர்கள் பிரபாகரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பில் கனேடிய அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடத்த வேண்டாம் என தற்போது கனடா கோரி வருகின்றது.
 
ஆயுதங்கள் கொள்வனவு செய்வதற்கு ஒரு மில்லியன் டொலர் தேவை என கனேடிய புலிகள் வலையமைப்பிடம் பிரபாகரன் கோரியதாகவும், அந்தப் பணம் ஆயுத முகவர் ஒருவருக்கு அனுப்பி வைக்க்பபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கான ஆதாரங்களை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
கனடாவில்  புலி ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நடாத்தி வருகின்றனர்.
 
கனேடிய தமிழ் காங்கிரஸிலிருந்து மீட்கப்பட்ட ஆவணங்களிலிருந்து இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக திவயின பத்திரிகை   செய்தி

வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment