Friday, May 31, 2013

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா சாமிதரிசனம்!

Friday, May 31, 2013
திருச்சி::ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் ஜூன் 3ந்தேதி வருவதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சுக்ரனின் அம்சமான ரங்கநாதரை சேவிப்பதற்காக ஜெயலலிதா நேற்று மாலை ஸ்ரீரங்கம் வருகை வந்தார்.

எண் கணிதப்படி குருப்பெயர்ச்சி 28ந்தேதி குருப்பெயர்ச்சி நடந்துள்ளது. பஞ்சாங்கப்படி 30ந்தேதிதான் குருப்பெயர்ச்சி நடக்கிறது. இதனால் குருப்பெயர்ச்சியும், குருவாரம் என்றழைக்கப்படும் வியாழக்கிழமையும் ஒரு சேர வருவதாலும், இந்த குருப்பெயர்ச்சியால் ஜெயலலிதாவின் சிம்மராசி, மகம் நச்சத்திரத்திற்கு சிறப்பான யோகங்கள் கூடி வருவதால் அன்றையதினம் சுக்ரனின் அம்சமான ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவித்தால் சகல நன்மைகளும், சிறப்புக்களும் கிடைக்கும் என்பதால் முதல்வர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை புரிந்ததாக கோவில் சார்பில் தெரிவித்தனர்.
முன்னதாக சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுன் மாலை 3 மணிக்கு மேல் தனி விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக திருச்சி-சென்னை பைபாஸ் ரோடு, கும்பகோணத்தான் சாலை, பெரியார் நகர் பாலம், அம்மா மண்டப சாலை வழியாக சரியாக மாலை 4.40 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலை வந்தடைந்தார்.
ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கேரள“ ஜெண்டா மேளம் முழங்க கோவில் நிர்வாகம் சார்பில் nullரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர் முதல்வர் ஜெயலலிதா கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.  அதன் பிறகு ஆரியபட்டாள் வாசல் அருகே பேட்டரி காரில் இருந்து இறங்கி மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார்.

பெருமாளை தரிசனம் செய்த பின்னர் மீண்டும் ஆரியபட்டாள் வாசலில் இருந்து பேட்டரி கார் மூலம் தாயார் சன்னதிக்கு சென்று தாயாரை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து நந்தவனம் தோப்பு வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு வந்தார். அங்கு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்த முதல்வர் ஜெயலலிதா பின்னர் உடையவர் ராமானுஜர் சன்னதியில் தரிசனம் செய்தார். அதன் பிறகு காரில் ஏறி கீழவாசல் வெள்ளை கோபுரம் வழியாக கோவிலில் இருந்து புறப்பட்டு கீழ உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, மேல உத்திர வீதி வழியாக மேலவாசல், மேலூர் சாலை ரோடு வழியாக வடக்கு வாசலில் உள்ள அகோபில மடத்திற்கு சென்றார். அங்கு புதிதாக பதவி ஏற்ற ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். முதல்வரை பார்த்து ஜீயர் நீnullங்கள் அடிக்கடி இங்கு வரவேண்டும். அனைவரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றார். பின்னர் மறைந்த ஜீயர்கள் 41, 44, 45 ஜீவசமாதிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஸ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாளின் தரிசனத்தை முடித்துக்கொண்ட முதல்வர் அங்கிருந்து காரில் புறப்பட்டு மேலூர்சாலை ரோடு, ராகவேந்திரபுரம் ஆர்ச் வழியாக அம்மா மண்டபம் ரோடு, மாம்பழச்சாலை, பெரியார் நகர் மேம்பாலம், கும்பகோணத்தான் சாலை, சென்னை பை-பாஸ் ரோடு வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றார். அங்கிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் சென்னை சென்றார். முதல்வர் வருகையொட்டி அம்மா மண்டப சாலையில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து முதல்வருக்கு வரவேற்பளித்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி திருச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் வழியெங்கும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் 3ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பங்கேற்பதற்காவும் முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சிக்கு வருகை தருகிறார். விழாவில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட பணிகளை தொடங்கி, திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி பேச உள்ள“ர். இதற்காக ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதி சந்திப்பில் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல்வரை வரவேற்ற கோடை மழை

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசனம் செய்ய வருகை தந்தார். இதற்காக தனி விமானம் மூலம் வருகை தந்த முதல்வர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். சரியாக 4.40 மணிக்கு அவர் ரெங்கா ரெங்கா கோபுரத்தை வந்தடைந்தார். அவர் வருகை தந்த சிறிது நேரத்தில் கோடை மழை கொட்டோ கொட் என வெளுத்து வாங்கியது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பொழிந்தது. இதனால் காலையில் இருந்து வாட்டி வதைத்த வெப்பம் தனிந்து மிகவும் குளிர்ந்த காற்று வீசத்துவங்கியது. திருச்சியில் nullநீண்ட நாட்கள“க வாட்டி வதைத்த வெப்பம் முதல்வர் வரவேற்பதற்காகவே கோடை மழை பொழிந்ததாக அங்கு கூடியிருந்தவர்கள் முனுமுனுத்ததை காதால் கேட்க முடிந்தது.
முதல்வரும் மனகுளிர்ச்சியுடன் பெருமாளை தரிசனம் செய்து விட்டு குளிர்ந்த காற்றுடன் காரில் ஏறி திருச்சி விமானம் நிலையம் நோக்கி சென்றார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை சென்றார்.

No comments:

Post a Comment