Wednesday, May 08, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரமுகர் சீ.வி,கே.சிவஞானத்தின் வீட்டின் மீது தாக்குதல்!
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரமுகர் சீ.வி,கே.சிவஞானத்தின் வீட்டின் மீது தாக்குதல்!
தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பிரமுகர் சீ.வி,கே.சிவஞானத்தின் வதிவிடம் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது. யாழ்.பருத்தித்துறை வீதியில் நல்லூர் சட்டநாதர் ஆலயம் முன்பதாக உள்ள அவரது வதிவிடமே தாக்கப்பட்டுள்ளது.
இரவு வேளை பைகளில் எடுத்து வந்த கொங்கிறீற் கற்களை வீசியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தயைடுத்து அயலவர்கள் திரண்டதையடுத்து தாக்குதலாளிகள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
மோசமான கல் வீச்சு காரணமாக வீட்டின் கண்ணாடி யன்னல்கள் பெரும்பாலானவை நொருங்கி சேதமாகியுள்ளது. தாக்குதலுக்கான கற்களை எடுத்து வந்த பைகள் வீதிகளெங்கும் சிதறிக்காணப்பட்டது.
சம்பவ வேளை தான் தாக்கப்பட்ட யன்னல்களுக்கருகாக அமர்நதிருந்து பணியாற்றிக் கொண்டிருந்ததாக ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த அவர் சிறுகாயங்களுடன் தப்பித்துக்கொணடுள்ளார்.
தாக்குதல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை உதவி கோரி பொலிஸாரை தொலைபேசியூடாக அழைத்த போதும் அவர்கள் வந்திருக்கவில்லையென ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த சீ.வி,கே.சிவஞான
ம் தன்னை நேரில் வந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பணித்ததாக தெரிவித்தார்.
எனினும் தாக்குதலாளிகள் அப்பகுதியில் பதுங்கியிருக்கலாமென்ற எதிர்பார்ப்புக்கள் மத்தியில் இன்று காலையே தான் நேரடியாக சென்று முறைப்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே அவரது வீட்டுச்சூழலில் மாட்டுத்தலைகள் அண்மையிலேயே வீசப்பட்டிருந்தது. வடக்கு மாகாணசபை தேர்தல் பரபரப்புக்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் அதில் (புலி)கூட்டமைப்பு சார்பில் யாழ்.மாவட்டத்தினில் முதன்மை வேட்பாளராக போட்டியிட தமது கட்சியிடம் அவர் விண்ணப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment