Tuesday, May 14, 2013
சென்னை::பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது; பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது; சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை தடை செய்ய, அரசு தயங்காது,'' என, பா.ம.க.,வுக்கு, முதல்வர் ஜெயலலிதா, எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் மற்றும் அக்கட்சித் தலைவர்கள் கைதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில் தொடரும் வன்முறை சம்பவங்கள் பற்றி, சட்டசபையில் நேற்று, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்டு வந்த, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்:
தடையை மீறி...
மாமல்லபுரத்தில், ஏப்., 25ம் தேதி, "சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா'வை, பா.ம.க., நடத்தியது. அப்போது, மரக்காணத்தில் வன்முறை நிகழ்ந்தது. மரக்காணம் சம்பவத்துக்கு, நீதி விசாரணை கேட்டு, மே, 1ல், ராமதாஸ் தலைமையில், தடையை மீறி, தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முற்பட்டனர். இவர்களில், 363 பேர் கைது செய்யப்பட்டு, கோர்ட் காவலில் வைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, சாலைகளை மறிப்பது, பஸ் மீது கல் வீசுவது, சரக்கு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைப்பது போன்ற, வன்முறை செயல்களில், பா.ம.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர்.எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல், "போராட்டம் தொடரும்' என, அன்புமணி அறிவித்தார். இதனால், பா.ம.க.,வினரின் வன்முறை தொடர்கிறது. சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட பா.ம.க.,வினர், முதலில் வாகனங்களை நிறுத்தி, பயணிகளை இறக்கி விட்டு, தீ வைத்தனர். பின்னர், பயங்கரவாத இயக்கங்கள் போல், ஓடும் வண்டிகள் மீது, பெட்ரோல் குண்டுகளை வீசி, பயணிகளை பீதிக்கு உள்ளாக்குகின்றனர்.
எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்பு
எம்.ஜி.ஆர்., சிலை அவமதிப்பு
பஸ்கள், தனியார் வாகனங்கள், எம்.எல்.ஏ., அலுவலகங்கள், வேளாண்மை கூட்டுறவு உரக் கிடங்கு, நியாய விலை கடைகள், கிராம நிர்வாக அலுவலகம், தனியார் வீடுகள், டாஸ்மாக் கடைகள் ஆகியவற்றின் மீது, பா.ம.க.,வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்; தீ வைத்துள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை தீ வைத்து கொளுத்தினர். வேலூர் மாவட்டம் கன்னிகாபுரத்தில், எம்.ஜி.ஆர்., சிலையை உடைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், எண்டியூரில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, அவமரியாதை செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், நெமிலியில், கல் வீச்சில் ஈடுபட்ட பா.ம.க.,வினரை, போலீஸ் எஸ்.ஐ., மற்றும் இரு போலீசார், விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவர்களை முற்றுகையிட்டு, பா.ம.க.,வினர் தகராறு செய்துள்ளனர். இச்சம்பவத்தை அறிந்து, அங்கு வந்த அரக்கோணம் பெண் இன்ஸ்பெக்டரை, தாக்கவும் முயன்றுள்ளனர்; போலீஸ் வாகனங்களை கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
பல நூறு கோடி சேதம்

பா.ம.க.,வினர் வன்முறைக்கு, 14 பஸ்கள் உட்பட, 16 வாகனங்கள் கொளுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான, 853 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இரு பாலங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு உள்ளன. நெடுஞ்சாலைகளில்,
120 மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர்; 45 மரங்களுக்கு தீ வைத்துள்ளனர். பா.ம.க., வன்முறைக்கு, மூவர் பலியாகியுள்ளனர்; 111 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வன்முறை தொடர்பாக, 7,464 பேர் கைது செய்யப்பட்டு, கோர்ட் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்; 20 பேர், குண்டர் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில், காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.வன்முறை தொடர்வதால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, தஞ்சை, நாகப்பட்டினம் மாவட்டங்களில், மே, 1ம் தேதி முதல், 1,601 பஸ்கள், பகல் நேரங்களில் நிறுத்தப்பட்டன.
மே, 10ம் தேதி, நிறுத்திய பஸ்களின் எண்ணிக்கை, 219 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில், 2,267 வழிகளில், மாலை, 6:00 மணி முதல் நகர பஸ்களும், 10:00 மணிக்கு மேல் புறநகர் பஸ்களும் இயக்கப்படுவதில்லை.

அவதூறு வழக்கு
கம்யூனிஸ்ட் கட்சியினர், அனுமதியின்றி போராட்டம் நடத்துகின்றனர்; அவர்களை அரசு அனுமதிக்கிறது. விடுதலை சிறுத்தைகளைத் தூண்டி, கலவரத்தை, அரசு திட்டமிட்டு நடத்திவிட்டு, பா.ம.க., மீது பழி போடுகிறது. கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன், லோக்சபா தேர்தல் கூட்டணி அமைக்க, ஜெயலலிதா நினைக்கிறார்' என, ஜாமினில் வெளிவந்துள்ள ராமதாஸ், அபத்தமாக பேசியுள்ளார். நிகழ்த்திய வன்முறையிலிருந்து தப்பி விடலாம் என, அவர் எண்ணுகிறார். இது போன்ற அவதூறுகளை பரப்பும் ராமதாஸ் மீது, அரசின் சார்பில், அவதூறு வழக்கு தொடரப்படும்.
நஷ்ட ஈடு
பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு, 1992ம் ஆண்டு, தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பை தடுத்தல்) சட்டத்தின் படி, பா.ம.க.,வினரிடமிருந்து நஷ்ட ஈடு பெறப்படும். பொது அமைதிக்கு குந்தகம் விளைப்பது; பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது; சட்டம் - ஒழுங்கை சீரழிக்க, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவற்றை செய்யும், எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சியை தடை செய்ய, அரசு தயங்காது.இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.
அரசியல் கட்சியை தடை செய்ய முடியுமா?
வழக்கறிஞர் கே.சக்திவேல்:பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியை, தடை செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு இல்லை. அரசியல் கட்சிகள், ஜனநாயகக் கடமைகளை ஆற்ற, அரசியலமைப்புச் சட்டத்தில், பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டதில் இருந்து, நீக்கம் செய்வதற்கு கூட, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் கிடையாது.
இதுவரை, பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும், தடை செய்யப்பட்டது கிடையாது. சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற, பொது அமைதியை உருவாக்க, சட்ட விரோத நடவடிக்கைகளைத் தடுக்க, மாநில அரசு, சில நடவடிக்கைகளை எடுக்கலாம்.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது, அமைப்பு மீது, நடவடிக்கை எடுக்கலாம்.பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் வருகிறது.
சங்கம், அமைப்பு என்கிற அந்தஸ்துக்கும் மேல், சென்று விடுகிறது. எனவே, அரசியல் கட்சியை, சங்கமாகவோ, அமைப்பாகவோ பார்க்க முடியாது.கடந்த, 2002ம் ஆண்டு, புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கும், ம.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுப்பப்பட்டது. "சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், "பொடா' சட்டத்தின் படி, அரசியல் கட்சியைத்தடை செய்ய, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என, அப்போது, சட்ட அமைச்சராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.நாட்டை துண்டாடும் வகையிலான செயல்கள், நாட்டுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, ஒரு அரசியல் கட்சியை, மாநில அரசு தடை செய்ய முடியாது. இயக்கங்கள், அமைப்புகளை வேண்டுமானால், தடை செய்யலாம்.
வழக்கறிஞர் சிராஜுதீன்:

சட்ட விரோத செயல்களில், ஒரு அமைப்பு, சங்கம் ஈடுபட்டால், அதை தடை செய்ய, மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. குற்றவியல் திருத்தச் சட்டம், இதற்கு வழி வகை செய்கிறது. அரசியல் கட்சி என்பதும், பலர் சேர்ந்த அமைப்பு தான். கட்சி என்கிற போர்வையில், பொது அமைதிக்கு இடையூறு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தினால், அது கட்சியாக இருந்தாலும், தடை விதிக்கலாம்.அவ்வாறு தடை விதித்தால், அரசு கெஜட்டில் வெளியிட வேண்டும். பின், அறிவுரை குழுமத்துக்கு அனுப்ப வேண்டும். அறிவுரை குழுமம், தடையை உறுதி செய்யலாம்; தடையை நீக்கவும் செய்யலாம். சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, சில அமைப்புகளை, தமிழக அரசே தடை செய்துள்ளது; அந்த தடை இப்போதும் அமலில் உள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தான், அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும் என்கிற ஒரே காரணத்தைக் கூறி, எதுவும் செய்யலாம் என்கிற அர்த்தம் அல்ல. மற்ற சட்டங்களும், அரசியல் கட்சிகளுக்கு பொருந்தும். அரசியல் கட்சியும், பலர் சேர்ந்த அமைப்பு என்பதால், அந்தக் கட்சி, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால், மாநில அரசு தடை செய்ய முடியும்.

No comments:
Post a Comment