Thursday, May 2, 2013

கப்பல் மோதியதால் படகு கவிழ்ந்தது நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு!

Thursday, May 02, 2013
திருவொற்றியூர்::மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் படகின் மீது துறைமுகத்திற்கு சென்ற கப்பல் மோதியது. இதில் நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்களை விசைப்படகு மீனவர்கள் காப்பாற்றினார்கள். திருவொற்றியூரில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் கேவிகே குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஏழுமலை (30), சுந்தரம் (40), பாஸ்கர் (28) ஆகியோர் நேற்று மாலை பைபர் படகில்  மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் கரைக்கு திரும்பியபோது சென்னை துறைமுகத்திற்கு கப்பல் சென்றது. இதில் படகின் மீது கப்பல் உரசிச்சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பைபர் படகு உடைந்து மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். இந்த நிலையில் விசைப்படகில் கரைக்கு திரும்ப¤ய மீனவர்கள் சிலர், 3 பேரையும் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதில் சுந்தரத்திற்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு படகு மீது கப்பல் மோதியதில் திருவொற்றியூரை சேர்ந்த  மீனவர் ஆனந்தன் இறந்தார். மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்தது மீனவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment