Tuesday, May 14, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடாதிருக்க, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய நாடுகளின் மாநாட்டுக்கு எதிர்ப்பை வெளியிடாதிருக்க, ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிறுத்தி இடம்பெறுகின்ற அநாவசிய செலவினங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நேற்றைய கூட்டத்தின் போது, ஐக்கிதேசிய கட்சியின் இலக்குகளை நிறைவு செய்யாத தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஹாலிஹெல, ஹப்புத்தளை, பிபிலை உள்ளிட்ட 5 பேரை பதவி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment