Wednesday, May 01, 2013
இலங்கை::பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்திக்கான தொழிற்துறை சாதனங்களை வடிவமைத்த பொறியியலாளர் சேந்தனுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவித்தார்.
பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கனேடிய சர்வதேச அபிவிருத்தி நிதியத்தின் நிதிப்பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அமைச்சர் அவர்கள் உற்பத்தி நிலையத்தின் தொழிற்துறை சாதனங்களை வடிவமைத்து உருவாக்கிய பொறியலாளர் சேந்தனுக்கு நினைவுப் பரிசில் வழங்கி கௌரவித்ததுடன், தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
புதிதாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மேற்படி தொழிற்துறை சாதனங்களைக் கொண்டு பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தினூடாக பனை வெல்லத்தை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி உரையாற்றும் போது, பனை வெல்ல உற்பத்தியை முன்னெடுக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் இந்நிலையம் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதுடன், கைதடியிலுள்ள பனை அபிவிருத்தி சபையின் கீழான பனை ஆராய்ச்சி நிலையத்தினது ஆலோசனை மற்றும் வழிகாட்டலைப் பெற்று இங்கு மேற்கொள்ளப்படும் உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
யாழ்.மாவட்ட பல நோக்குக் கூட்டுறவுச் சங்கமூடாக சிறு கைத்தொழில்துறை வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாரிய பங்களிப்பு வழங்கி வருகின்றார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment