Monday, May 13, 2013
புதுடெல்லி: சீனா, இந்தியா இடையே புதிய எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.
சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சல்மான் குர்ஷித் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சீன ராணுவம் ஊடுருவியது போன்ற சம்பவம் இனி நடைபெற கூடாது என்று இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டது. இரு தரப்பு உறவை பலப்படுத்தும் முயற்சிக்கு இந்த பிரச்சினை தடையாக இருக்க கூடாது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளிடையே எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனா விருப்பம் தெரிவித்தது.
இது தொடர்பான பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன என்றார் குர்ஷித்.
முன்னதாக இந்த பயணத்தின் போது சீன பாதுகாப்பு ஆலோசகர் யாங் ஜிச்சியையும் குர்ஷித் சந்தித்து பேசினார். ஜிச்சி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனுடன் அடுத்த மாதம் எல்லை பிரச்சினை குறித்து 16 வது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
.jpg)
No comments:
Post a Comment