Friday, May 17, 2013

வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளிவிட்ட தாய் தற்கொலை முயற்சி!

Friday, May 17, 2013
இலங்கை::வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளிவிட்ட தாய் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
 
இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
ஒரு வயது, நான்கு வயது மற்றும் மூன்று வயதான பெண் பிள்ளைகளையே குறித்த தாய் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பிரதேச மக்களால் குறித்த பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
நீதவான் விசாரணையை அடுத்து  குறித்த பிள்ளைகளின் சடலங்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்படவுள்ளன.
 
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
 

 

No comments:

Post a Comment