Saturday, May 25, 2013இலங்கை::இராணுவத்தின் பிரதான பொறுப்பும் கடமையுமான தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்துள்ள போதிலும், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக இராணுவம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளில் எந்த குறைவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அவர், எந்த நாட்டின் இராணுவத்தினரனதும் பிரதான பொறுப்பு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகும் எனவும் கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு போதுமான ஆளணி இருப்பதால், பாதுகாப்பு கடமைகளை தவிர, நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் இராணுவத்தினர் பங்களிப்பை வழங்க முடிந்துள்ளது. நிர்மாணப் பணிகள், விவசாயம், சுற்றுலா போன்ற அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டாலும் இதனால் நாட்டின் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment