Wednesday, May 15, 2013

இலங்கைக்குப் பாதகமான இரண்டு நிபந்தனைகளை நீக்க இந்தியா இணக்கம்!

Wednesday, May 15, 2013
இலங்கை::சம்பூர் அனல் மின் நிலை யம் அமைப்பது தொடர்பான ஒப்பந் தத்திலுள்ள இலங்கைக்கு பாதகமான இரு நிபந்தனைகளை நீக்க இந்தியா இணங்கியுள்ளது. இதற்கமைய மின்கொள்வனவு தொடர்பான புதிய ஒப்பந்தம் அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பணிகள் ஆரம் பிக்கப்படுமென மின் சக்தி எரிசக்தி அமைச்சின் செயலாளரும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் பதில் செயலாளருமான எம். எம். சி. பேர்டி ணன்டஸ் தெரிவித்தார்.குறித்த நிபந்தனைகள் மூலம் இலங் கைக்கு 25 வருடங்களுக்கு 120 பில்லியன் நஷ்டம் ஏற்படுவதாகவும் குறித்த நிபந் தனையாலே சம்பூர் திட்டம் தாமத மானதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பூர் அனல் மின் நிலையம் குறித்து வினா எழுப் பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சின் செயலாளர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் இந்திய மின்சார சபைக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் சம்பூர் அனல் மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சார கொள்வனவு தொடர்பில் 2012ல் ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டவரைவு தயாரிக்கப்பட்டது.  ஆனால் அதிலுள்ள 2 நிபந்தனைகள் இலங்கைக்கு பாதகம் என்பதால் குறித்த ஒப்பந்தம் தாமதமானது. அதனை அகற்ற இந்திய தரப்பு மறுத்தது. தொடர் பேச்சுவார்த்தையின் பின்னர் அவற்றை அகற்ற இந்தியா இணங்கி யுள்ளது.2016 ஆம் ஆண்டில் சம்பூர் அனல் மின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்படாவிட்டால், நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படும். மின்கொள் வனவு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் ஒப்பந்தம் கைச்சாத்தாகும்.
நாட்டில் தற்காலிகமாகவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் மின் கட்டணம் குறைக் கப்படும். 600 மெகாவோர்ட் மின்சாரம் இந்த வருடத்தில் கிடைக்க உள்ளது என்றார்.

No comments:

Post a Comment