Tuesday, May 21, 2013

பிரபாகரனுக்க எதிராக கிளர்ச்சி செய்யத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் ,புலிகளின் மாத்தய்யா பிரிவினருக்கு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாகத் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்!

Tuesday, May 21, 2013
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச  புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
 
 புலிகள் இயக்கத்தில் பிளவினை ஏற்படுத்தும் நோக்கில் தமது தந்தை இவ்வாறு ஒரு பகுதியினருக்கு ஆயுதங்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
புலிகளின் மாத்தய்யா பிரிவினருக்கு ஜனாதிபதி பிரேமதாச இந்த ஆயுதங்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாக தமது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரபாகரனுக்க எதிராக கிளர்ச்சி செய்யத் தேவையான பின்னணியை உருவாக்கும் நோக்கில் மாத்தய்யாவின் தலைமையிலான குழுவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
இந்திய உளவுத் துறையான றோவிற்கு புலிகளின் ரகசியங்களை கசிய விட்டதன் காரணமாக பின்னர், பிரபாகரனினால், மாத்தய்யா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment