Monday, May 06, 2013
அம்பலாங்கொடை தர்மாஷோக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி பல் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 23 மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
சிறைச்சாலைகள் அற்ற பொலிஸ் நிலையங்கள் அற்ற- நீதிமன்றங்கள் அற்ற நாடென்றும் உலகில் இல்லை. சோம்பேறியான அதிகாரிகள் அற்ற நாடு இல்லை.
இருப்பினும் அபிவிருத்தி அடைந்த பலம்வாய்ந்த நாடுகள் இவற்றை முக்கியப்படுத்துவதில்லை.
உலகிலுள்ள ஏனைய நாடுகள் தங்களுடைய நாட்டின் பெருமையை மாத்திரம் பேசுகின்றன. ஆனால்- எமது நாட்டின் ஒரு சிலர்- நாட்டின் நல்ல விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களையே வெளிக்கொண்டு செல்கின்றனர் என்றும் தமது உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை::இந்த உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் குற்றங்கள்- குறைகள் இருக்கின்றன. குற்றம்- குறைகளற்ற நாடொன்று உலகில் இல்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
அம்பலாங்கொடை தர்மாஷோக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி பல் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 23 மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கினார்.
இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அவர் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
சிறைச்சாலைகள் அற்ற பொலிஸ் நிலையங்கள் அற்ற- நீதிமன்றங்கள் அற்ற நாடென்றும் உலகில் இல்லை. சோம்பேறியான அதிகாரிகள் அற்ற நாடு இல்லை.
இருப்பினும் அபிவிருத்தி அடைந்த பலம்வாய்ந்த நாடுகள் இவற்றை முக்கியப்படுத்துவதில்லை.
உலகிலுள்ள ஏனைய நாடுகள் தங்களுடைய நாட்டின் பெருமையை மாத்திரம் பேசுகின்றன. ஆனால்- எமது நாட்டின் ஒரு சிலர்- நாட்டின் நல்ல விடயங்களைத் தவிர ஏனைய விடயங்களையே வெளிக்கொண்டு செல்கின்றனர் என்றும் தமது உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments:
Post a Comment