Monday, May 20, 2013

பல்லாண்டு கால மெளனத்தின் பின்னர் ஜே.வி.பி. செய்த கொலைகளை ஏற்றுக் கொண்டார் லால்காந்த!

Monday, May 20, 2013
இலங்கை::ஜே.வி.பி கடந்த காலத்தில் மேற்கொண்ட மிலேச்சத்தனமான கொலை சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் தாம் அவற்றை செய்யவில்லை என்று நிராகரித்து வந்த போதிலும் சமீபத்தில் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே.டி. லால்காந்த ஜே.வி.பி. குற்றம் புரிந்துள்ளது என்று ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
நாட்டுப்பற்றுடன் நாம் மேற்கொண்ட யுத்தத்தில் எதிரிகளை ஒழித்துக் கட்டியது உண்மைதான் என்று கே.டி. லால்காந்த கூறியிருக்கிறார். நாம் அன்று தேசிய அடையாள அட்டைகளை பொதுமக்களிடம் இருந்து சேகரித்தோம். மின்மாற்றிகளை உடைத்து சீர்குலைத்தோம் என்று லால்காந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியிருக்கிறார்.இதுவரையில் ஜே.வி.பியினால் கொல் லப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஜே.வி.பியினர் இந்தக் குற்றச் செயல்களை ஏற்றுக்கொள்ள வில்லை. நாட்டுப்பற்றுடைய அமைப்பின் தலைவரான கீர்த்தி விஜயபாஹ¥ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் சமன் பெர்ணான்டுவை சார்ந்தவர்களே இக்கொலைகளை செய்தார்கள் என்பது இப்போது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
 
நாட்டுப்பற்றுடைய அமைப்பும் ஜே.வி.பியும் ஒரே அமைப்பு என்பதில் எவ்வித இரகசியத் தன்மையுமில்லை. இத்தகைய அட்டூழியங்களை நாம் செய்ய வில்லை என்று பொறுப்பேற்க மறுத்ததன் மூலம் ஜே.வி.பி. நாட்டுப்பற்றுடைய அமைப்புக் காக உயிர்த்தியாகம் செய்தவர் களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது.
 
1988, 1989ம் ஆண்டு படுகொலை களுக்கு ஜே.வி.பியும் ஐக்கிய தேசியக்கட்சியுமே பொறுப்பேற்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சியினர் மஞ்சள் பூனைகள், பச்சை புலிகள், என்ற பெயர்களில் கொலை புரியும் குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளைச் செய்தனர். இத்தகைய அச்சுறுத் தல்களினால் அன்று முழு நாடும் நடுநடுங்கிக் கொண்டி ருந்தது.
சமதர்மவாதம், சமத்துவம் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை கட்டுக்கடங்கவில்லை. இத்தகை கொலைகளில் சிலரை மட்டும் பகிரங்கமாகின. மற்றவை அனைத்தும் மூடி மறைக்கப் பட்டன. அன்று பத்திரிகைகள் அச்சுறுத்தக்கூடிய தலைப்புகளில் இந்த செய்திகளை வெளியிட்டன. “சுட்டுக் கொல்லப்பட்டவரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது, இருவர் மின் கம்பத்தில் கட்டப் பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்” போன்றவை சில தலைப்பு களாகும்.
 
ஜே.வி.பியினர் கடைகளை மூடிவிடுமாறு கடிதங்களை கொடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அன்று ஸ்தம்பித நிலையை அடையச் செய்தனர். ஜே.வி.பியினர் அப்பாவி மக்களை படுகொலை செய்து விட்டு அவர்களுக்கு தேசத்துரோகி கள் என்று நாமமிடவும் தவறவில்லை. கொல்லப்பட்ட வர்களின் சடலங்களையும் அவர்கள் மிருகத்தனமாக சீர் குலைத்தனர்.
ஐக்கியத் தேசியக்கட்சியும், தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு எதிரிகளை கொன்று குவித்தது. ஆயினும் ஜே.வி.பி. அதிகாரத்தை கைப் பற்றுவதற்காக கொலை புரிவதை ஒரு யுக்தியாக கையாண்டது.
நாட்டுப்பற்றுடையவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஜே.வி.பி.யினர், ஊரடங்கு சட்டத்தை மீறி அதிகாலையில் நெல் வயல் களுக்கு சென்ற அப்பாவி விவ சாயிகளை சுட்டுக் கொன்றனர். ஜே.வி.பியினரின் படுகொலை களுக்கு முடிவே இருக்கவில்லை. எமது நாட்டுப்பற்றுடைய போராட்டத்துக்கு ஆதரவு தர தயக்கம் காட்டிய அப்பாவி பொதுமக்களையும் நாம் கொலை செய்தோம் என்று லால்காந்த கூறியிருக்கிறார்.
 
ஜே.வி.பியினர் ஒருவரை அரசியல்வாதியென்றோ, கலைஞர் என்றோ, கல்விமான் என்றோ பார்க்காமல் சுட்டுக் குவித்தனர். ஜே.வி.பியினர் ஆயுதப்படை வீரர்களை பதவி களை விட்டு வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று அச்சுறுத்தினர். பின்னர் அப்படை வீரர்களின் குடும்பங்களையும் ஜே.வி.பி சுட்டுக் கொன்றது. வானொலி, தொலைக்காட்சி கலைஞரான பிரேமகீர்த்தி டி அல்விஸ், பிரபல நடிகர் விஜயகுமாரதுங்க, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் தேவிஸ் குருகே ஆகியோரை ஜே.வி.பி எதற்காக கொலை செய்தது என்பது இன்றும் எவருக்கும் தெரியாதி ருக்கிறது.
விஜயகுமாரதுங்கவை கொலை செய்த துஷான் என்பவருக்கு தன்னை அசோகா என்று அழைத்துக் கொண்ட ஒரு ‘ஜ.வி.பி தலைவன், சென். மிச்செல் ஹோட்டலில் இருந்து விஜயகுமாரதுங்கவின் முகத்தில் சுட்டு அவரது தோற்றத்தை அவலட்சணப்படுத்த வேண்டு மென்று உத்தரவிடப்பட்டிருந்த விடயமும் இப்போது வெளி யாகியிருக்கிறது.
 
எனினும் தாசன் என்பவர் முதல் துப்பாக்கிச் சூட்டிலேயே விஜயகுமாரதுங்கவை சுட்டுக் கொன்றார். பின்னர் அவரது முகத்தில் பலமுறைசுட்டு முகத்தை அவலட்சணப்படுத்தி யிருக்கிறார் என அன்றைய தகவல்கள்தெரிவித்தன. விஜய குமாரதுங்க தன்னைவிட அழகிய தோற்றத்தை கொண்டிருந்த காரணத்தினால் பொறாமைப் பட்டு விஜயவீர அவரை கொலை செய்வதற்கு உத்தரவிட்ட தாகவும் வதந்திகள் அடிபட்டன.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்டென்லி விஜேசுந்தர, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவி டாக்டர் கிளடிஷ் ஜெயவர்தன, சங்கைக்குரிய கொட்டிகாவத்தை சாததிஸ்ஸ தேரர், சங்கைக்குரிய வெல்லே தொட்ட பண்ணாதர்ஸி தேரர், சங்கைக்குரிய போத்தரமுல்ல பிரேமாலோக தேரர், சாகரிக்கா கோமஸ் மற்றும் தேவபண்டார செனரத் ஆகியோரை ஏன் கொலை செய்தீர்கள் என்று ஜே.வி.பியிடம் கேட்கும் போது ஜே.வி.பி அத்தகைய அட்டூழி யங்கள் குறித்து மெளனம் சாதிக்கின்றது.
 
நவீன நாகரீக சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் சட்டத்தின் படி கொலை செய்த அனை வருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தான் கொலை செய்ததை ஏற்றுக் கொண்ட எந்தவொரு கொலைகாரருக்கும் சட்டம் மன்னிப்பளிக்காது. 1971ம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சி பற்றி நூலொன்றை எழுதிய நீதியரசர் அலஸ் சகல கொலைகள் குறித்தும் விசாரணை செய்வது அவசியம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
 
ஆம். நாம் கொலை செய்தோம் என்று லால்காந்த முழு உலகத்துக்கே அறிவித்துள்ளார். ஆனால், சட்டம் மெளனம் சாதிக்கின்றது. எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளும் நாம் கொலை செய்தோம்.
எமது தமிழ் விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளை கொலை செய்தோம் என்று சொல்லலாம். இத்தகைய சூழ்நிலையில் சட்டம் செயற் படாவிட்டால் மக்களுக்கு சட்டத்தின் மீது இனிமேலும் நம்பிக்கை இருக்குமா?

No comments:

Post a Comment