Wednesday, May 15, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு தொடர்பில் கனடாவும், பஹாமஸூம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கனேடிய மற்றும் பஹாமஸ் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
பஹாமஸ் வெளிவிவகார அமைச்சர் பிரட் மிச்சலுக்கும், கனேடிய மாநில வெளிவிவகார அமைச்சர் டெயன் அபிலோஸிக்கும் இடையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பஸாமஸ் வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இணைந்து கொண்டு உறுப்பு நாடுகளுடன் ஒற்றுமையாக செயற்பட்டு வருவதாக வெளிவிவகர அமைச்சின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நடத்தக் கூடாது என கனடா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது, எவ்வாறெனினும் இந்த விடயங்கள் குறித்து பேசப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
கனேடிய மாநில வெளிவிவகார அமைச்சர் தற்போது கரீபிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஓர் கட்டமாக அவர் பஹாமஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.

No comments:
Post a Comment