Friday, May 10, 2013

வெளியுறவு மட்டத்திலான உறவை மேம்படுத்த இந்தியா-சீனா புதிய உடன்படிக்கை!

Friday, May 10, 2013
பெய்ஜிங்::காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு மிரட்டியது. தெப்சாங் பகுதியில் இந்தியா பதுங்கு குழிகள் அமைக்காது என்ற உறுதியை அடுத்து சீனா ராணுவம் வெளியேறியது.

இந்நிலையில் சீனா சென்ற இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், வெளியுறவு மந்திரி வாங் யீயை சந்தித்து புதிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். பின்னர் குர்ஷித் கூறியதாவது:-

2006-ம் ஆண்டு ஒப்பந்தப்படி இரு நாடுகளின் உரையாடல் வழிமுறைகளை மேம்படுத்துவது குறித்து பேசப்பட்டது. இரு நாடுகளின் வெளியுறவு மட்டத்தில் பேசப்படும் புதிய ஒத்துழைப்பு செயல்முறைகள் குறித்து உரிய காலத்தில் செய்தியாளர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கவேண்டும். சீனாவுடன் ஏற்படும் கவலையளிக்கக்கூடிய விசயங்களை குறிப்பாய் வர்த்தக உறவுகள் குறித்து எடுத்துரைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் சில தினங்களில் சீனா வெளியுறவு அதிகாரிகள் டெல்லி வந்து இந்த புதிய ஒத்துழைப்புகள் குறித்து உறுதி செய்வார்கள்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment