Wednesday, May 22, 2013

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி!

Wednesday, May 22, 2013
சென்னை::ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மறைந்த காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், மத்திய மந்திரி முனியப்பா, தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, குமரி அனந்தன் ஆகியோர் ராஜீவ் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் தலைவர்களும், தொண்டர்களும் நினைவிடத்தில் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். எம்.பி.க்கள் ராமசுப்பு மாணிக் தாகூர் விஸ்வநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் எச்.வசந்தகுமார், ஆர்.தாமோதரன், பீட்டர் அல்போன்ஸ், டி.யசோதா ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் சக்கர பாணி ரெட்டியார், சக்தி வடிவேலு, எஸ்.ஆர்.கே.மனோகரன், காஞ்சி மதியழகன், எம்.கோவிந்தசாமி, ராயபுரம் மனோ, பட்டுக்கோட்டை ராஜேந்திரன், கவிஞர் ரவிபாரதி, கஜநாதன், எம்.எஸ்.காமராஜ், மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஐ.டி. அரசன், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஜெயகலா பிரபாகர், வில்லிவாக்கம் சுரேஷ், மாணவர் காங்கிரஸ் யஷ்வந்த் சாகர், ஜோஸ்வா, ஆயிரம் விளக்கு ரஞ்சன்குமார், கவுன்சிலர் பி.வி.தமிழ்ச்செல்வன், வேலு, செல்வம், அகரம் கோபி, உடையார் எஸ்.கே.சோம சுந்திரம் உள்பட காங்கிரசார் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவு ஜோதியை தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். டாக்டர் அன்பரசு தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. ஏழைகளுக்கு இலவச உணவும் வழங்கப்பட்டது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ்காந்தி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் எம்.பி. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
குமரி அனந்தன், ஜே.எம்.ஆரூண் எம்.பி., முன்னாள் அமைச்சர் பூவைராகவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் யசோதா, வசந்தகுமார், வினாயக மூர்த்தி, முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், பட்டுக் கோட்டை ராஜேந்திரன், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம், தலைவர் சுரேஷ்பாபு, மயிலை பெரியசாமி, முனவர் பாஷா, குரோம்பேட்டை டி.என்.அசோகன், சக்தி வடிவேலு, ஜவகர் பாபு, எஸ்.கே.ஏ.அகமது அலி உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் திரண்டு வந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபுதாஸ், எம்.ஜி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவர் யஷ்வந்த் சாகர், ஜோஸ்வா உள்பட 22 பேர் சத்தியமூர்த்தி பவனில் இருந்து 22 மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஆலந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆதம்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு நகர தலைவர் நாஞ்சில் பிரசாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் தீனதயாளன், டி.எஸ்.ராஜ், தனசேகரன், நேரு ரோஜா, ஜோதி, கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நங்கநல்லூர் பழவந்தாங்கல் பகுதிகளில் ஆலந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் சைதாப்பேட்டை ராஜீவ் சிலை அருகில் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பெரம்பூரில் அகரம் கோபி தலைமையில் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. என்.ரங்க பாஷ்யம், கொளத்தூர் கோபால் கணபதி, குணசேகரன், அண்ணாமலை பங்கேற்றனர். மயிலாப்பூரில் மயிலை ஸ்ரீராம் தலைமையில் ராஜீவ் உருவப் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment