Wednesday, May 22, 2013
சென்னை::மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான நேற்று அவரது படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார். அதனை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் திருப்பி சொல்லி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசுவதற்காக ராஜீவ்காந்தி வந்தார். அப்போது புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் அவர் மரணமடைந்தார். அவர் மறைந்த தினமான மே.21-ந்தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளான ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு இந்திய வரைப்படத்திற்கு கீழ் ராஜீவ் காந்தியின் படம் ரோஜா மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. 2 பக்கமும் தேசிய கொடி வைக்கப்பட்டிருந்தது. தேசிய கொடியின் கீழ் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் என்று எழுதப்பட்டிருந்தது.
முதல்வர் ஜெயலலிதா 11.45 மணியளவில் அங்கு வந்தார். நேரகாக ராஜீவ்காந்தி படம் அருகே சென்று மலர்களை தூவி வணங்கினார். அதன்பின்னர் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார். அங்கு கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை ஜெயலலிதா படித்தார்.
அகிம்சை, சகிப்புத் தன்மை ஆகிய நம்நாட்டின் மரபுகளில் தளராத நம்பிக்கையுடைய இந்திய மக்களாகிய நாம் எவ்வகையான கொடுஞ்செயல்களையும், வன்முறைகளையும் முழு ஆற்றலோடு எதிர்ப்போம் என உறுதி கூறுகிறோம். எல்லா மக்ளிடத்திற்கும் அமைதி, சமுதாய ஒற்றுமை, நல்லுணர்வு ஆகியவற்றை போற்றி வளர்க்கவும், மக்களுடைய உயிர்களுக்கும் மற்றும் நற்பண்புகளுக்கும் ஊறு விளைவிக்கும் பிரிவினை சக்திகளை எதிர்த்துப் போராடவும் நாம் உறுதி கூறுகிறோம் என்ற உறுதிமொழியை முதல்வர் ஜெயலலிதா படித்தார்.
இந்திய உறுதிமொழியை அங்கு கூடியிருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் திருப்பி சொல்லி ஏற்றுக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் தனபால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், கே.பி.முனுசாமி, வைத்திலியங்கம், மோகன், பா.வளர்மதி, பழனியப்பன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படத்திற்கு சத்தியமூர்த்தி பவனில் ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின், 22ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது உருவப்படத்திற்கு, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், சத்தியமூர்த்தி பவனில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. ராஜிவின், 22ம் ஆண்டு நினைவு தினம், பயங்கரவாத தடுப்பு தினமாக, நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜிவ் உருவப்படத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன், முன்னாள் அமைச்சர் பூவராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன்பின் தலைமைச் செயலக ஊழியர்கள், முதல்வர் தலைமையில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கவர்னர் மாளிகையில், ராஜிவ் படத்திற்கு, கவர்னர் ரோசய்யா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவரது தலைமையில், கவர்னர் மாளிகை ஊழியர்கள், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

_11.jpg)
No comments:
Post a Comment