Tuesday, May 07, 2013
இலங்கை::உள்நாட்டு சக்திகளைக் கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயற்சித்த சிலர் தற்போது வெளிநாட்டவர்களின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக நீர்ப்பாசன மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.
பதுளையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தகவல்கள் வெறும் வதந்திகளே என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை வரையறுத்தல் மற்றும் காணி, காவல்துறை அதிகாரங்களில் திருத்தம் செய்தல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அமைச்சரவையில் பேசக்கூடவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆளும் கட்சிக்குள் பாரியளவு முரண்பாடு காணப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுக்கு இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் அது கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment