Sunday, May 5, 2013

மதவாச்சிக்கும் மடுவுக்குமிடையிலான புகையிரத சேவை மே 14 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது!

Sunday, May 05, 2013
இலங்கை::மதவாச்சிக்கும் மடுவுக்குமிடையிலான புகையிரத சேவை மே 14 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 
போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் அறிவுறுத்தல்களுக்கமைய புகையிரத திணைக்களமானது இதற்கான ஒழுங்குகளை செய்துவருவதாக புகையிரத பொது முகாமையாளர் பீ.ஏ.பீ ஆரியரத்ன குறிப்பிட்டார்.
 
இச்சேவையானது நாளாந்தம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடக்கு புகையிரத பாதையை பயன்படுத்தும் 90 சதவீத்துக்கும் அதிகமான பயனிகள் அநுராதபுரம் மற்றும் மதவாச்சி எல்லையில் இருப்பதால் கொழும்பிலிருந்து மடுவுக்கான நேரடியான சேவையொன்று தேவைப்படவில்லை எனினும் மடுவுக்கு பயனிக்க விரும்பும் பயனிகள் மதவாச்சியிலிருந்து செல்லமுடியும் என அவர் தெரிவித்தார்.
 
எனினும் மடுத்திருவிழா போன்ற விசேட நிகழ்வுகளின்போது கொழும்பிலிருந்து நேரடியாக மடுவுக்கு விசேட புகைவண்டி சேவைகளை நடாத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment