Saturday,April 06,2013
புதுச்சேரி::புதுவையில் தூர்தர்ஷன் அலுவலகம் மீது தாக்குதல்: இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் புலிகளுக்கு ஆதரவான மாணவர்கள் போராட்டம்!
தூர்தர்ஷன் அலுவலகம் மீது மாணவர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்தன. இதனால் புதுவை கோரிமேடு பகுதியில் நேற்று சிறிது நேரம் திடீர் பரபரப்பு நிலவியது. இது குறித்த விபரம் வருமாறு:-
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரி மாணவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
எ
னினும் மாணவர்கள் மத்தியில் இலங்கை தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளது. இலங்கை தமிழர்களின் அவலத்தை தூர்தர்ஷன் ஒளி பரப்பவில்லை என்று அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதையடுத்து புதுவை கோரிமேட்டில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகம் நோக்கி நேற்று காலை மாணவர் கூட்டமைப்பினர் திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் தூர்தர்ஷன் அலுவலகத்திற்கு பூட்டு போட முயன்றனர். தூர்தர்ஷன் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதை அறிந்தவுடன் ஊழியர்கள் அலுவலக கதவை மூடிக் கொண்டனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரவல்லவன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலின் போது தூர்தர்ஷன் அலுவலகத்தின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதில் அலுவபக கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment