Tuesday, April 02, 2013
இலங்கை::நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதேசமயம் பிரிவினைவாதிகளும் அல்ல. புலிபயங்கரவாதத்தினை ஒழித்தற்காக நாம் இனவாதிகளுமல்ல: விமல் வீரவன்ச!
நாம் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதேசமயம் பிரிவினைவாதிகளும் அல்ல. புலிபயங்கரவாதத்தினை ஒழித்தற்காக நாம் இனவாதிகளுமல்ல' என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், குருநகர் 5 தொடர்மாடி கட்டிடத்தினை புனரமைப்புச் செய்யவதற்கான ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், 'யுத்தத்தின் போது இறந்த உயிர்களை திருப்பிக்கொடுக்க முடியாவிட்டாலும் இழப்பீடுகளை வழங்க முடியும். கடந்த யுத்தத்தின் போது குண்டுகள் கட்டிடங்களை துழைத்துச்சென்ற அதேசமயம் மக்களின் இதயங்களையும் துழைத்துள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தும் இராணுவ தரப்பிலிருந்தும் பலர் இறந்துபோயுள்ளனர். இந்த இழப்புக்கள் வேதனையளிக்கின்றன' என்றார்.
யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களைப் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கின்றது. அந்த வகையில, இந்த கட்டிடத்தின் யுத்த துளைகளை மூடி, உணர்வுபூர்வமாக வாழக்கூடிய வகையில், இக்கட்டிடம் புனர்நிர்மாணித்து புதிதாக தர முடியும். ஆனால் இதயங்களில், மனங்களில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைப்பதற்கு சில காலங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். அதுவரையில், நாம் இதயங்களில் உள்ள காயங்களை ஆற்றுவதற்கு செயற்பட வேண்டும்' என குறிப்பிட்டார்.
'அத்துடன், தூசுகள் வான் நோக்கி எழுவது இயல்பு, வான் நோக்கி எழும் தூசுகள் மீண்டும் பூமியில் வந்து விழும் போது அடையும் வலிகளும், தேவைகளும் இல்லாது வாழ முடியாது. அதேவேளை, குழப்பங்கள் இருக்க வேண்டுமென்று சிலர் விரும்புகின்றார்கள்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திகளிற்கு தடை விதிக்க வேண்டும், குழப்பங்கள் இருக்க வேண்டும் என தொடர்ந்தும் முயற்சிக்கின்றார்கள். அதனால்தான் தென் இந்தியாவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காகவே வருகின்றார்கள்' என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நேர்மை, உண்மை இருப்பவர்கள் இறுதி யுத்தத்தின் போது உதவி இருக்க வேண்டும். இலங்கையில் இருக்கும் மக்கள் ஐக்கியத்துடன் வாழ்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதையும் விரும்பவில்லை. அதனால் தான், இலங்கைக்கு எதிராக ஜெனீவா மாநாட்டில் இந்தியாவினால் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன' என்றார்.
மக்கள் தம்மிடையே ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். குறிப்பிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் சமாதானத்தினை அனைவருக்கும் வழங்குவதாக கூறிக்கொண்டு செல்கின்றார்கள். ஆனால், அவர்களுக்கு சொல்லத்தான் முடியும் செய்ய முடியாது.
இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விடுவார்கள். அதன் பின்பு மக்களை பார்ப்பதில்லை. அதேபோன்று தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது தான் கொழும்பிற்கு வருவார். மற்றைய நாட்கள் வெளிநாட்டில் தான் இருப்பார்கள். அவ்வாறானவருக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு என்ன தேவை என்பது தெரியாது.
ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு செய்ய தெரியும். அவர் ஒருநாளும் வெளிநாட்டிற்கு சென்றதை நான் காணவில்லை. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் தான் அவருக்கு தெரியும். எதிர்ப்புக்கள் வந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைள் தொடர்ந்து நடக்கும்' என விமல் குறிப்பிட்டார்.
இன்று ஒற்றுமையையும் ஐக்கியத்தினையும் குழப்பும் வகையில் யாராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக போராட நாம் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் எதை போட விரும்புகின்றீர்கள். உங்கள் குழந்தைகளின் கழுத்தில் தங்கச் சங்கிலியையா, அல்லது சைனட் குப்பிகளையா' என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இனி மக்கள்தான் சிந்தித்து செயற்பட வேண்டும். எனவே, இந்த சிதைந்து போன கட்டிடத்தினை புனர்நிர்மாணித்து யுத்தத்தின் சிதைவுகளை மறந்து எதிர்காலத்தில் நல்ல பிரஜையாக வாழ்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்' என்று அமைச்சர் விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட புலிபிரிவினைவாதத்தினை எதிர்காலத்துக்கு கொண்டு செல்லக் கூடாது. கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினைவாதத்தினால் வேதனை தான் மிஞ்சியது. உடைந்து, சிதைந்து போன கட்டிடங்களும்தான் மிஞ்சின. எதிர்காலத்தில் ஒற்றுமை, ஐக்கியம் இரண்டுமே இருக்க வேண்டும். ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தினால் தான் பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்கும் உங்கள் வீடுகளையும் காணிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.
No comments:
Post a Comment