Saturday, April 6, 2013

ராஜிவ் கொலை கைதி பரோல் கோரி வழக்கு : அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

Saturday,April 06,2013
மதுரை::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரனை, பரோலில் அனுமதிக்க கோரிய வழக்கில், அரசுத் தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை ராஜேஸ்வரி, தாக்கல் செய்த மனு: என் மகன் ரவிச்சந்திரன், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக, 21 ஆண்டுகள் சிறையில் உள்ளார். மூன்று முறை அவருக்கு ஐகோர்ட், பரோல் வழங்கியுள்ளது. 2012 நவ., 26 முதல், டிச., 10 வரை, பரோல் அனுமதித்த போது, "ஊடகங்களுக்கு பேட்டி கூடாது; தடை செய்யப்பட்ட இயக்கங்களின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளக் கூடாது' என, உத்தரவிட்டது. கோர்ட் உத்தரவை தவறாக புரிந்து, அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., சொத்து உள்ள இடங்கள், மருத்துவமனை செல்லவும், வழக்கறிஞர்கள், உறவினர்களை பார்க்கக் கூட, என் மகனை அனுமதிக்கவில்லை;
 
 வீட்டுக் காவலில் வைத்திருந்தார். உள்துறை செயலர், சிறை ஏ.டி.ஜி.பி., மற்றும் எஸ்.பி.,க்கு மனு அளித்தோம். மனு பரிசீலிக்கவில்லை; குடும்ப சொத்து விவகாரங்களுக்கு தீர்வு காண முடியவில்லை. இவ்விவகாரங்களுக்கு தீர்வு காண, ரவிச்சந்திரனை ஒரு மாதம் பரோலில் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய உத்தரவிட்ட நீதிபதி கே.கே.சசிதரன், விசாரணையை, ஏப்., 18க்கு ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment