Tuesday, April 02, 2013
சென்னை::இலங்கைதமிழர்களுக்கு ஆதரவாக இன்று தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர் தங்களது உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிபோரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு, சுதந்திரமான வாழ்வாதாரம் கிடைக்க வலியுறுத்தி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் மற்றும் பலவேறு சங்கங்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை தி.நகர் நடிகர் சங்க வளாகத்தில் தென்னிந்திய நடிகர்கள் இன்று காலை உண்ணாவிரதத்தினை துவக்கினர். இதில் பல முன்னணி நடிகர்கள் அஜித், சரத் குமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

நடிகர்கள் உண்ணாவிரதம் – பங்கேற்றுள்ளவர்கள் விவரம்!
தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ் கலை உலகின் சார்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
சென்னை, தியாகராய நகர், நடிகர் சங்க வளாகத்தில், காலை 9 மணி அளவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் தற்போது கலந்து கொண்டிருக்கும் நடிகர்கள் விவரம்,
நடிகர்கள் ரஜினிகாந்த், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜீவா, உதயநிதி ஸ்டாலின், பிரசாந்த், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், அருண் விஜய், சிவா, சிவ கார்த்திகேயன், ஸ்ரீகாந்த், பிரேம்ஜி, கே. பாக்யராஜ், நாசர், அர்ஜுன், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர் ஸ்டார், எம்.எஸ். பாஸ்கர், டெல்லி கணேஷ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார் மன்சூரலிகான், நிழல்கள் ரவி, கணேஷ் வெங்கட்ராமன்,டி.பி. கஜேந்திரன், ஸ்ரீமன் தற்போது உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வருகின்றனர்.
தயாரிப்பாளர் எஸ். தாணு, ஜி.சேகரன், கவிஞர் வைரமுத்து, சினேகன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நடிகைகள் ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி, ரேகா கோவை சரளா , தன்ஷிகா, மோனிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னணி ஹீரோயின்கள் யாரும் இதுவரை கலந்து கொள்ளவில்லை...
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர்கள் சங்கம் இடத்தில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கியது.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், தொடங்கி வைத்தார். இதில் நடிகர்கள் அஜீத்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், பவர் ஸ்டார் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் தன்னால் வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதம் படித்துக்கப்பட்டது. விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டார்.
விபத்து ஏற்பட்டு காலில் அடுபட்டுள்ள அஜீத், காலில் கட்டுடன் காலை 9.20 மணிக்கு வந்தார். அஜீத் வந்தததும் ரசிகர்களின் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அஜீத் கை காட்டி ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி தெரிவித்தார். இதற்கு முன்பு நடிகர் சங்கம் சார்பாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் அஜீத் இதுவரை கலந்துகொள்ள வில்லை. அவர் கலந்துகொள்ளும் முதல் உண்ணாவிரதப் போராட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது...

ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட மேலும் பல நடிகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த போராட்டத்தை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்
No comments:
Post a Comment