Friday, April 05, 2013
இலங்கை::தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற குரல்களை எழுப்பிவருகின்றனர்: விநாயகமூர்த்தி முரளிதரன்!
இலங்கை::தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற குரல்களை எழுப்பிவருகின்றனர்: விநாயகமூர்த்தி முரளிதரன்!
தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகள் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது மட்டும் தமது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற குரல்களை எழுப்பிவருவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆரம்ப பாடசாலை அபிவிருத்தி தொடர்பிலான தேசிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இன்று கல்விக்காக பெருமளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டம் மற்றும் மகிந்தோதய திட்டம், ஆரம்ப பாடசாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் உட்பட பல திட்டங்கள் மூலமாக இந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து மாவட்டங்களுடனும் ஒப்படும்போது மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான நிதிகள் கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
நாங்கள் யுத்த சூழ்நிலையின்போது எவ்வாறான நிலையினைக் கொண்டிருந்தோம். இன்று எவ்வாறான நிலையில் உள்ளோம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்திக்கவேண்டும்.
யுத்த காலத்தில் எங்காவது சண்டை நடந்தால் அதன் வெற்றிகுறித்து நாங்கள் சந்தோசப்பட்டாலும் அதன் துன்பங்கள் தொடர்பில் நாங்கள் சிந்திப்பதில்லை. நாங்கள் பல துன்பங்கள் மத்தியிலேயே பல வெற்றிகளைப் பெற்றோம்.
யுத்தம் மூலம் ஒரு முடிவைப்பெற வேண்டும். ஒரு தீர்வைப்பெற வேண்டும். ஆனால் இங்கு அதனை நோக்காகக் கொண்டு செயற்பட முடியாமல்போன காரணத்தினால்தான் நாங்கள் அதில் இருந்து வெளியேறி இன்று யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
யுத்தத்தின் தாக்கங்கள் தொடர்பில் நாங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இன்று எமது குழந்தைகள் பல்வேறு வழிகளிலும் சாதனைபடைத்து வருகின்றனர். சுதந்திரமாக திரிந்து வருகின்றனர். இதனை நாங்கள் கடந்த காலத்தில் மேற்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.
வடக்கினை பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் முற்றாக பூர்த்தியடைந்துள்ளது. தற்போது ஒருவர் கூட முகாமில் இல்லை. அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வேண்டும். தற்போது கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றப்பட வேண்டும்.
வடகிழக்கில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மக்களின் உயர்வுக்கு எதனையும் செய்யாத தமிழ் நாட்டு தலைவர்கள் இன்று தங்களது அரசியல் நோக்கங்களுக்காக தேவையற்ற விடயங்களுக்கு குரல்கொடுத்து வருகின்றனர். தேவையான விடயங்களுக்கு குரல்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் தேவையற்ற விடயங்களுக்கு குரல்கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
புலம்பெயர் மக்கள் ஒன்றுபட்டு இங்குள்ள தமிழ் உறவுகளின் வளர்ச்சிக்கு உதவ முன்வரவேண்டும்.தேவையற்ற விடயங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டு இன்று எமது மக்களுக்கு தேவையானவற்றை மட்டும் செய்ய முன்வர வேண்டும்.
இன்று தமிழர்களின் இருப்பு கல்வி மற்றும் பொருளாதாரத்திலேயே தங்கியுள்ளது. இந்த இரண்டையும் நாங்கள் வளர்த்தால் எமது சமூகத்தின் இருப்பை யாராலும் அசைக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கொண்டனர்
No comments:
Post a Comment