Tuesday, April 02, 2013
இலங்கை::இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் தொடர்ந்தும் புரிந்துணர்வுடனயே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி எதிர்வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற போதுஇ மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்இ தமிழக கட்சிகள்இ உள்ளூராட்சி தேர்தல்களை புறக்கணிக்கவேண்டும் என்று விஜயகாந்த் கோரியிருந்தார்
எனினும் தமிழக கட்சிகள் அதனை நிராகரித்து விட்டன
இந்தநிலையில் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை தமது கட்சி புறக்கணிக்கவுள்ளதாக விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment