Monday, April 8, 2013

ஆஸ்திரேலியாவுக்கு தப்ப முயன்ற இலங்கை அகதிகள் 75 பேர் மீது வழக்கு!

Monday, April 08, 2013
நாகப்பட்டினம்::ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகளை 10-ந் தேதி வரை காவலில் வைக்கும்படி நாகை மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் தோகைமலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜா, குடியாத்தம், காஞ்சீபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கடையநல்லூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களை சேர்ந்த 21 பெண்கள், 20 குழந்தைகள் உள்பட 120 பேர் கடந்த 5ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள கிராமத்தில் இருந்து விசைப்படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.

பின்னர் அந்த படகில் அவர்கள் ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் படகு திடீரென பழுதாகி நின்றது. இதனால் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 120 பேரையும், இந்திய கடற்படையினர் மீட்டு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் நாகை கடலோர காவல் படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் நாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். வெளிநாட்டிற்கு செல்ல தேவையான பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை.

அதனால் பிடிக்கப்பட்ட 120 பேரில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் தவிர மற்ற 75 பேர் மீது நாகை கடலோர காவல் படை போலீஸ் பாஸ்போர்ட் சட்டப்பிரிவு, அயல்நாட்டவர் சட்டப்பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அகதிகளிடம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி விசைப்படகில் ஏற்றிச்சென்ற ஏஜெண்டுகள் உள்பட 6 அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கைது செய்யப்பட்ட 75 பேரையும் நாகை கடலோர காவல் படை போலீசார், நாகை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 10ந் தேதி வரை காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு சரஸ்வதி உத்தரவிட்டார். இதையொட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.


tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment