Thursday, April 25, 2013

சென்னை சென்ட்ரலில் இருந்து 2 அடுக்கு ஏசி ரயில்: பெங்களூருக்கு இன்று புறப்பட்டது!

Thursday, April 25, 2013
சென்னை::சென்னை&பெங்களூர் இடையே 2 அடுக்கு ஏசி ரயில் இன்று காலை பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. ரயிலில் சென்ற பயணிகள் உற்சாகத்துடன் தங்கள் பயணத்தை தொடங்கினர். ரயில்வே பட்ஜெட்டில் 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சென்னை & பெங்களூர் இடையிலான 2 அடுக்கு ஏசி ரயில் விழா, ஆடம்பரம் ஏதுமின்றி தனது சேவையை தொடங்கியது.

சென்னை சென்ட்ரலு க்கு  இன்று காலை 6.15 மணிக்கு 2 அடுக்கு ஏசி ரயில் வந்தது.  புதிய ரயில் இயக்கப்படுவதை கவனிக்க சென்னை ரயில்வேக் கோட்ட முதுநிலை இயந்திரவியல் பொறியா ளர் கோபால், முதுநிலை வணிக மேலாளர் மனோஜ்,  சென்ட்ரல் ரயில்நிலைய மேலாளர்  கோவிந்தசாமி ஆகியோர்  வந்திருந்தனர். இயக்கப்படும் தேதி 2 நாட்களுக்கு முன்பு  அறிவிக்கப்பட்டதால்  40 முதல் 45 சதவீத இடங்களே நிரம்பியிருந்தன.

 சரியாக 7.25 மணிக்கு சென்ட்ரலில் இருந்து 2 அடுக்கு ஏசி ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு  புறப்பட்டுச் சென்றது. ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை,  பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர் கண்டோன்மென்ட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் பகல்  1.30 மணிக்கு பெங்களூர் சென்றடையும். அங்கிருந்து பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு இன்றிரவு 8.45 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

No comments:

Post a Comment