Thursday, April 4, 2013

அரசியல் புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருந்த 20 இலங்கைப் பிரஜைகளை திருப்பியனுப்பியுள்ளது அவுஸ்திரேலியா !

Thursday, April 04, 2013
இலங்கை::அரசியல் புகலிடம் கோரி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றிருந்த 20 இலங்கைப் பிரஜைகளை நேற்று நாட்டிற்குத் திருப்பியனுப்பியதாக அவுஸ்திரேலிய குடிவரவு - குடியகல்வு விவகாரங்களுக்கான அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
குறித்த 20 இலங்கைப் பிரஜைகளும் ஏற்கனவே கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்குரிய சட்ட ரீதியிலான உரிமையைக் கொண்டிருக்கவில்லை என விசாரணைகளின்போது தெரியவந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு - குடியகல்வு அமைச்சர் பிரண்டன் ஓ கொனர் கூறியுள்ளார்.
 
இதன்படி கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 936 இலங்கையில் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 756 பேர் தன்னிச்சையாக இலங்கைக்கு திரும்ப விருப்பம் வெளியிட்டதன் அடிப்படையில், நாடுகடத்தப்பட்டனர்.
அகதிகளின் பெருக்கத்தை சமாளிப்பதில் இந்த திட்டம் வெற்றியளித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் அகதிகள் நாடுகடத்தப்படுவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment