Monday, April 8, 2013

தென்னிந்திய நலன்புரி முகாம்களில் இருந்து 2 வருடங்களுக்குள் அனைவரும் அழைத்துச் செல்லப்படுவர்: இலங்கை!

Monday, April 08, 2013
இலங்கை::தென்னிந்திய நலன்புரி முகாம்களில் இருந்து 2 வருடங்களுக்குள் அனைவரும்  அழைத்துச் செல்லப்படுவர் - இலங்கை
 
தென்னிந்திய நலன்புரி முகாம்களில்; இருந்த இலங்கையர்களில் சுமார் 68 ஆயிரம் பேர் தற்போது இலங்கை திரும்பியுள்ளதாகவும் ஏனைய இலங்கை அகதிகளை இரண்டு வருடங்களுக்கு மீண்டும் இலங்கை அழைத்து வர, இலங்கை  அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இதுவரை 05 ஆயிரத்து 304 பேர் நாடு திரும்பியுள்ளனர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிண ஆணைக்குழுவும் இலங்கை கதிகளை திரும்ப அழைப்பதற்காக இரண்டு நாடுகளும் ஆலோசனை செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
 
இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கு, கடவூச்சீட்டு மற்றும் பிறப்பத்தாட்சி பத்திரங்களை கட்டணங்கள் இன்றி வழங்க சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேவேளை நாடு திரும்பும் இலங்கை அகதிகளின் குடும்பங்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் தமது பூர்வீக இடங்களுக்கு செல்ல பயண கொடுப்பனவுகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
 
இதற்கான இணைப்பு நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு என்பன மேற்கொண்டு வருகின்றன.
 
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 8வது கூட்டத் தொடரில், இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன்,  நாடு திரும்ப விரும்பு அகதிகள் இலங்கை திரும்புவதற்கான வசதிகளை வழங்க இணைந்து செயற்படுவது என இணக்கம் காணப்பட்டது. 

No comments:

Post a Comment