Monday, April 08, 2013
புதுடில்லி::இலங்கையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, வீடு கட்டித்
தரும் திட்டத்துக்காக, மத்திய அரசு, இரண்டாம் கட்டமாக, 100 கோடி ரூபாய்
வழங்கிஉள்ளது.மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டுள்ள, தமிழர்களின் மறுவாழ்வு பணிகளுக்காக,
மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழர்களுக்கு
வீடுகள் கட்டித் தரும் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக,
இத்திட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இ
தையடுத்து,
இரண்டாம் கட்ட பணிகள், ஆறு மாதங்களுக்கு முன், துவங்கப்பட்டன. இரண்டாம் கட்ட
பணிகளுக்காக, இதுவரை, 100 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கிஉள்ளது.
இந்த தொகை, கொழும்பில் செயல்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி,
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆகிய வங்கிகளின்
கிளைகள் மூலம், சம்பந்தபட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில், நேரடியாக
செலுத்தப்பட்டு உள்ளன.
இந்த தொகையை வைத்து, பயனாளிகள், தாங்களாகவே, வீடுகளை கட்ட வேண்டும். இந்த வீட்டு
வசதி திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், கண்காணிக்கவும், இலங்கையில் உள்ள, இந்திய
தூதரகத்தில், சிறப்பு குழு செயல்பட்டு வருகிறது.இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 43
ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவற்றில், 39 ஆயிரம் வீடுகள், இலங்கையின் வடக்கு
மாகாணத்திலும், 4,000 வீடுகள், கிழக்கு மாகாணத்திலும், கட்டித்
தரப்படவுள்ளன.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment