Monday, March 04, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சியின் நடவடிக்கைகள் உண்iயைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதிப் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு தடை ஏற்படுத்தி வருகின்றது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எனினும், சில பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும், அந்த ஒத்துழைப்பை கட்சி வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை தமிழ்த்தேசியக் (புலி)கூட்டமைப் வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வகையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறுகிய காலத் திட்டங்கள் பல ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சில பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசியல் சாசன திருத்தங்கள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு பல தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், இந்த அழைப்பினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு இந்திய அரசாங்கமும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்கு வலியுறுத்தியுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment