Friday, March 22, 2013

இலங்கை தமிழர் பிரச்சினை: மத்திய அரசுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் கோஷம்- பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

Friday, March 22, 2013
புதுடெல்லி::இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்றம் இன்று கூடியதும் காங்கிரசை தவிர மற்ற தமிழக எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக கூறி தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தெலுங்கானா பிரச்சினையை கிளப்பினார்கள். இந்த அமளி காரணமாக சபாநாயகர் மீராகுமார் அவையை 12 மணிக்கு ஒத்தி வைத்தார்.

சபை மீண்டும் கூடியதும் இலங்கை தமிழர் விவகாரத்தால் தொடர்ந்து அமளி ஏற்பட்டது. இதனால் சபாநாயகர் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். டெல்லி மேல்சபையிலும் தமிழக எம்.பி.கள் இலங்கை பிரச்சினையை கிளப்பினார்கள். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர். இதை தொடர்ந்து சபை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment