Thursday, March 28, 2013

இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விருப்பம்: இலங்கை அணி வீரர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க இந்திய மத்திய அரசாங்கம் உறுதி!

Thursday, March 28, 2013
இலங்கை::இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இருந்து விலக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் விரும்பவில்லை.

எனினும் அவர்களது விருப்பத்தின் பேரில் அந்த போட்டிகளில் பங்குபற்ற, விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

அத்துடன், இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதற்கு முன்னர் அவர்களது விருப்பத்தை கேட்டறித்து கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனிடையே, போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை அணி வீரர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க இந்திய மத்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கம எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.


No comments:

Post a Comment