Sunday, March 10, 2013
இலங்கை::சென்னை::இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்படுவது தொடர்பில், இந்திய மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தமது கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் இணக்கப்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விரைவில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியை சந்தித்து இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment