Monday, March 25, 2013

மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பின் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூடியது: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்- தி.மு.க. செயற்குழு தீர்மானம்!

Monday, March 25, 2013
சென்னை::மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக, திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு இன்று காலையில் கூடியது. இலங்கை பிரச்னையில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியது. இந்தியா நடவடிக்கை எடுக்காமல்போனால் அமைச்சரவையிலிருந்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகும் என கட்சி தலைவர் கருணாநிதி அறிவித்தார். இந்நிலையில் அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முயற்சிக்கவில்லை என கூறி மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியது...

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் - இனப் படுகொலை குறித்தும், நம்பகத்தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றினை அமைத்து, குறிப்பிட்ட கால வரையறைக்குள் விசாரணை நடத்தி முடிப்பது குறித்தும்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறித்தும்; இந்தியாவே தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும், இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும், 2013, நவம்பர் மாதம் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலையை நடத்தி, தமிழ்  இலங்கை மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் அம்மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ, ஏற்கக்கூடியதோ அல்ல. எனவே, அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்க்கூடாது என்று காமன்வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது. நம் வேண்டுகோளையும் மீறி, மாநாடு இலங்கையில் நடத்தப்படுமானால், உலகத் தமிழர்களின் உணர்வுகளை எதிரொலிக்கும் வகையிலும், ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இந்தியா அம்மாநாட்டில் கலந்து கொள்ளாமல், அதனைப் புறக்கணிக்க வேண்டும்,  இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்காக போராடும் மாணவர்களுக்கு பாராட்டு என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் திமுகவின் செயற்குழு கூட்டம் இன்று காலை 10.20 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி எம்பி, குஷ்பு மற்றும் முக்கிய தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், செயற்குழு உறுப்பினர்கள் என்று 150க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் வெளியேறியதற்கான காரணம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ன நிலை எடுப்பது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இலங்கை பிரச்னை குறித்தும் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, நெப்போலியன் கலந்து கொள்ளவில்லை.

No comments:

Post a Comment