Thursday, March 21, 2013
இலங்கை::தென்னிந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள் எப்போதும் அவதானத்தை கடைபிடிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் இடம்பெற்ற பிரதேசங்களை தவிர்த்து பயணங்களை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகயா உள்ளிட்ட யாத்திரை தளங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இதனிடையயே, பொதுபல சேனா, ஜாதிக்க ஹெல உறுமய மற்றும் கண்டி இந்து சங்கம் உள்ளிட்ட மேலும் சில தரப்பினர் நேற்றைய தினம் கண்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் இந்திய உதவி உயர்ஸதானிகரத்திற்கு கால்நடையாக சென்று தமிழக தாக்குதல்களுக்கு தமது ஆட்சேபனையை தெரிவிக்கும் மகஜரையும் கையளித்துள்ளனர்.
இந்தநிகழ்வில், சென்னை தொடருந்து நிலையத்தில் அண்மையில் தாக்குதல்களுக்கு உள்ளாகி நேற்றுமுன்தினம் நாடுதிரும்பிய வடுபொல வங்கீச தேரரும் பங்குகொண்டிருந்தார்.

No comments:
Post a Comment