Tuesday, March 26, 2013

இந்திய எல்லையில் மீன் பிடித்த, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது

Tuesday, March 26, 2013
சென்னை::இந்திய எல்லையில் மீன் பிடித்த, இலங்கை மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திரா அருகே புலிகாட் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த, மீனவர்களை கடலோர காவல்படையினர் சோதனையிட்டதில், அவர்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும், தாங்கள் வழி தவறி வந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக, மீனவர்கள், குமணன், அசன் உள்ளிட்ட, ஐ ந்து இலங்கை மீனவர்களை, கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் 300 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment