இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்குள் உள்ள தொடர்புகள் பற்றி விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது!
புலிகளின் தலைவர் பிரபாகரன் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள தொடர்புகள் பற்றி விசாரணை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது
இந்த விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) வெளியிட்டுள்ளார். தமிழ்ச் செல்வன் தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு ஆலோசனைகளை வழங்கியதாகவும் கருணா கூறியுள்ளார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், புலிகளின் சில தலைவர்களுக்கு, நெருங்கிய உறவினர் எனவும் கருணா குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு சுவிஸர்லாந்து சென்று, இலங்கைக் எதிராக விசாரணை நடத்துமாறு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிக்கையொன்றையும் கையளித்துள்ளது.












No comments:
Post a Comment