Friday, March 22, 2013

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வரும் எந்த வொரு நபருக்கும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங் கத்தால் முடியும் - மஹிந்த அமரவீர!

Friday, March 22, 2013
இலங்கை::இலங்கைக்கு வரும் எந்த வொரு நபருக்கும் பாதுகாப்பு வழங்க இலங்கை அரசாங் கத்தால் முடியுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழகம் உட்பட எந்த வொரு இடத்திலிருந்தும் இலங்கை வரும் எவருக்கும் பாதுகாப்பை வழங் குவதற்கான நடவடிக்கைகளை முன்னெ டுப்பதற்கு அரசாங்கத்தால் முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

உலக வளிமண்டலவியல் தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வளிமண்டலவியல் தொடர்பான தகவல் பரிமாற்றத்தில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்கின்றபோதிலும், அண்மையில் இலங்கையிலிருந்து சென்ற பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இலங்கையர்கள் எவரும் தமிழகத்துக்குச் செல்லக் கூடாது, அதேபோன்று தமிழகத்திலிருந்து எவரும் இலங்கைக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என சிலர் கூறுகின்றனர். எனினும், எனது நிலைப்பாடு என்னவெனில், தமிழகத்துக்கு இலங்கையர் செல்வது நிறுத்தப்பட்டாலும், தமிழகத்திலுள்ளவர்கள் இலங்கை வருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கையிலிருந்து சென்ற பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்களுக்கு தமிழக அரசாங்கத்தால் பாதுகாப்பு வழங்க முடியாவிட்டாலும், எமது நாட்டுக்கு வரும் எந்தவொரு நபருக்கும் எம்மால் பாதுகாப்பு வழங்க முடியும். இதனை நாம் உலகுக்குக் காண்பிக்க வேண்டும். எனவே, தமிழகத்திலுள்ளவர்கள் இலங்கை வருவதற்கு எவ்வித தடையும் ஏற்படுத்தப்படக் கூடாது.

பெளத்த மதகுருமார் தமிழகத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருப்பதுடன், இந்திய வர்த்தகர்களால் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு எதிர்ப்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment