Wednesday, March 06, 2013
சென்னை::ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசாங்கத்தின் தகவல்களை மேற்கோள்காட்டி, த இந்தியாவின் ஐ.பி.என் லைவ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இலங்கை சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
அத்துடன், இந்த பிரேரணையில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு வலியுறுத்தப்படவில்லை.
இந்த காரணங்களால் இந்தியா குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கும் என்று இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment