Friday, March 22, 2013

இந்தியா பரிந்துரை செய்த திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது?

Friday, March 22, 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா பரிந்துரை செய்த திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை தொடர்பிலான ஏழு திருத்தங்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

தீர்மானத்திற்கு பரந்தளவிலான ஆதரவினை கோர வேண்டியுள்ளதனால் இந்தியாவின் திருத்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுதி நேரத்தில் திருத்தங்களைச் செய்ய இந்தியா மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த போதிலும், தீர்மனத்திற்கு இந்தியா ஆதரவளித்தது.

No comments:

Post a Comment